ஜோதிட கேள்வி பதில்கள்

மீண்டும் வேலை கிடைக்கும்

27th Nov 2020 12:00 AM

ADVERTISEMENT

 

எனக்கு 50 வயது ஆகிறது. உயரிய பதவியில் இருந்த என்னை கடந்த மே மாதத்தில் வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள். மறுபடியும் எப்பொழுது வேலை கிடைக்கும்? 

வாசகர், ஹைதராபாத்.

உங்களுக்கு துலாம் லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம். லக்னம், எட்டாமதிபதி சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சுய சாரத்திலமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். லாபாதிபதியான பதினொன்றாம் அதிபதியான சூரிய பகவான் சுய சாரத்தில் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சமடைகிறார். இதனால் பலமான "பௌர்ணமி யோகம்' உண்டாகிறது. தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்திலமர்ந்து ஐந்தாம் பார்வையாக தன் மூலத் திரிகோண வீடான தனுசு ராசியையும், ஏழாம் பார்வையாக ஐந்தாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும் அங்கு உச்சம் பெற்றமர்ந்திருக்கும் சூரிய பகவானையும் (சிவராஜயோகம்), லக்னாதிபதியான சுக்கிர பகவானையும் பார்வை செய்கிறார். 

ADVERTISEMENT

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் பாக்கியாதிபதியான புத பகவானுடன் வர்கோத்தமம் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) பெற்று அமர்ந்திருக்கிறார். 


நான்காம் வீட்டிற்கும், ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் ஆறாம் வீட்டில் ராகு பகவானுடன் இணைந்து அவர்கள் இருவரும் புத பகவானின் சாரத்தில் ஒரே பாகையில் அமர்ந்திருக்கிறார்கள். தொழில் ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்து சுபத்துவம் பெற்றிருப்பதும் சிறப்பு. அவருக்கு தற்சமயம் புத பகவானின் தசையில் செவ்வாய் பகவானின் புக்தி நடக்க இருப்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு நல்ல வேலை கிடைத்து விடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT