ஜோதிட கேள்வி பதில்கள்

படித்த பெண் அமையும்

27th Nov 2020 12:00 AM

ADVERTISEMENT

 

எனது காலஞ்சென்ற சகோதரர் மகனுக்கு வயது கூடிக்கொண்டே போகிறது. பல பெண்களைப் பார்த்தும் ஒன்றும் கைகூடவில்லை. சுமாரான வேலையில்தான் உள்ளார்; நல்ல வேலை எப்பொழுது கிடைக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? 

வாசகர், சென்னை.

உங்கள் சகோதரர் மகனுக்கு மகர லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். லக்னாதிபதி, குடும்பாதிபதி சனி பகவான் அயன ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிர பகவான்களுடன் இணைந்திருக்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத் திரிகோண வீடான தனுசு ராசியை அடைகிறார். 

ADVERTISEMENT

குருபகவானின் ஐந்தாம் பார்வை தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சனி, சுக்கிர, செவ்வாய் பகவான்களையும், ஒன்பதாம் பார்வையாக தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். ஆறாம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் லக்னத்தில் சூரிய பகவானின் சாரத்தில் அஷ்டமாதிபதியான சூரிய பகவானுடனும் (புத ஆதித்ய யோகம்), ராகு பகவானுடனும் இணைந்திருக்கிறார்கள். 

களத்திர ஸ்தானாதிபதி சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திலும், களத்திர காரகர் சுக்கிர பகவான் சயன ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருப்பதாலும், தற்சமயம் புத பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT