ஜோதிட கேள்வி பதில்கள்

அஷ்டலட்சுமி யோகம்

27th Nov 2020 12:00 AM

ADVERTISEMENT


என் மகள் நன்றாகப் படித்து மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். திருமணம் தள்ளிக் கொண்டே செல்கிறது. சிலர் மீன லக்னம் என்றும், மற்றவர்கள் மேஷ லக்னம் என்றும் கூறுகிறார்கள்; எது சரி? எப்பொழுது குடும்பத்தில் நிம்மதி நிறையும்? 

வாசகி, மதுரை.

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், ரிஷப நவாம்சம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம் மூன்றாம் பாதம் என்பது சரியானது. 

லக்னாதிபதி, அஷ்டமாதிபதி லக்னத்தில் மூலத் திரிகோணம் பெற்று பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைப் பெற்று தனம், வாக்கு, குடும்பம் மற்றும் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சுக்கிர பகவானுடன் இணைந்து அவர்கள் இருவரின் பார்வையும் களத்திர ஸ்தானத்தின் மீது படிகிறது. 

ADVERTISEMENT

சுகாதிபதி சந்திர பகவான், பூர்வ புண்ணியாதிபதி சூரிய பகவான் இருவரும் தைரிய ஸ்தானத்தில் இணைந்திருப்பது சிறப்பான புத்திர பாக்கியத்தைக் குறிக்கிறது. தைரியம், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான மூன்று,  ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் தன காரகர் மற்றும் பாக்கியாதிபதியான குரு பகவானுடன் இணைந்து அவர்கள் இருவரின் பார்வையும் அஷ்டம ஸ்தானமான மாங்கல்ய ஸ்தானத்தின் மீது படிகிறது. 

ராகு பகவான் ஆறாம் வீட்டிலமர்ந்து அஷ்டலட்சுமி யோகத்தைப் பெற்று குரு பகவானின் பார்வையைப் பெறுகிறார். தற்சமயம் புத பகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். குடும்பப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும். தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT