ஜோதிட கேள்வி பதில்கள்

குழப்பங்கள் தீரும்

25th Nov 2020 06:00 AM

ADVERTISEMENT

நான் ஒரு பெயர் பெற்ற பன்னாட்டு நிறுவனத்தில் கணினிப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறேன். எனக்கு வரவேண்டிய பதவி உயர்வு வரவில்லை; மாறாக எங்கள் குழுவில் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு என்னையே ஏதாவது ஒருவகையில் பொறுப்பாக்கி விடுகிறார்கள். இதனால் தீராத மன உளைச்சல் உண்டாகிறது. எப்பொழுது இது தீரும்? பதவி உயர்வு எப்பொழுது கிடைக்கும்? 

வாசகி, பட்டுக்கோட்டை.

உங்களுக்கு விருச்சிக லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி, ஆறாமதிபதி செவ்வாய் பகவான் லக்னத்தில் ஆட்சி பெற்று பஞ்ச மஹா புருஷ யோகங்களிலொன்றான ருசக யோகத்தைக் கொடுக்கிறார். அவருடன் தொழில் ஸ்தானாதிபதியான சூரிய பகவானும் இணைந்திருக்கிறார். 

இரண்டு, ஐந்தாம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான் ஆறாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத் திரிகோண வீடான தனுசு ராசியை அடைகிறார். அவருடன் கேதுபகவான் இணைந்திருப்பது கோடீஸ்வர யோகத்தைக் கொடுக்கிறது. குரு பகவானின் ஐந்தாம் பார்வை பத்தாம் வீட்டையும், ஏழாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானையும், ஒன்பதாம் பார்வையாக இரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் அஷ்டம (பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம்), லாப ஸ்தானாதிபதியான புத பகவானையும் பார்வை செய்கிறார். 

ADVERTISEMENT

மூன்று, நான்காம் வீடுகளுக்கு அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார். 

தற்சமயம் குரு பகவானின் தசையில் முற்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து சுக்கிர பகவானின் புக்தி நடக்க இருப்பதால், உங்கள் வேலையில் இருக்கும் குழப்பங்கள் விலகி விடும். பதவி உயர்வும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT