ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகள் +2 முடித்துவிட்டு தற்சமயம் நீட் தேர்வுக்கு பயிற்சி செய்து வருகிறார். மருத்துவ படிப்புக்கு சீட் கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

8th May 2020 07:24 PM

ADVERTISEMENT

மருத்துவ படிப்பு உண்டு


- வாசகர், பவானி

உங்கள் மகளுக்கு மகர லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னம் மற்றும் குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.

பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானத்தில் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவானும் இருவரும் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சூரியபகவானும் இணைந்துள்ளார்.

ADVERTISEMENT

தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் சந்திரபகவானுடனும் (குருசந்திரயோகம்) ராகுபகவானுடனும் இணைந்திருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியபகவான் (சிவராஜயோகம்), தர்மகர்மாதிபதிகளின் மீதும், ஏழாம் பார்வை தன் ஆட்சி வீடான அயன ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தின் மீதும் படிகிறது. சுக ஸ்தானம்,

கல்வி ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் உச்சம் பெற்றும் நவாம்சத்தில் மேஷ ராசியில் ஆட்சி பெற்றும் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் அவருக்கு குருபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடப்பதால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும். லக்னத்தில் செவ்வாய்பகவான் உச்சம் பெற்றிருப்பதால் ருசக யோகமும் உண்டாகிறது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT