ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகள் விவசாயப் படிப்பு படித்து விட்டு தற்சமயம் குடிமை பணிகளுக்கான தேர்வுகளுக்கு படித்து வருகிறார். அதோடு தமிழ்நாடு அரசு தேர்வுகளுக்கும் முயற்சி செய்கிறார். அரசு உத்தியோகம் எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

8th May 2020 07:23 PM

ADVERTISEMENT

அரசு உத்தியோகம் கிடைக்கும்

- வாசகர், குமாரபாளையம்

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம்.  லக்னம் மற்றும் சுக ஸ்தானம், கல்வி ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் லக்னத்திலேயே மூலதிரிகோணம் பெற்று ஹம்ஸ யோகத்தையும் பெற்று அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதிகளான சூரிய, புத பகவான்கள் தர்மகர்மாதிபதி யோகம் பெற்று லாப ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள்.

குருபகவானின் ஐந்தாம் பார்வை பூர்வபுண்ணிய ஸ்தானத்தின்மீதும், ஏழாம் பார்வை களத்திர ஸ்தானத்தின்மீதும், ஒன்பதாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய்பகவானின் மீதும் (குருமங்கள யோகம்) படிகிறது. கல்வி ஸ்தானத்தில் சனிபகவான் சுய சாரத்தில் அமர்ந்து கேதுபகவானுடன் இணைந்து  தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவான் மற்றும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சுக்கிரபகவானையும் பார்வை செய்கிறார்.

ADVERTISEMENT

தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுய புக்தி நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு தொடங்கும் குருபகவானின் புக்தியில் சிறப்பான அரசு உத்தியோகம் கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணமும் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT