ஜோதிட கேள்வி பதில்கள்

குலதெய்வமாக அம்மன்

31st Jul 2020 06:00 AM

ADVERTISEMENT


என் ஜாதகப்படி குலதெய்வத்தைப் பற்றி கூறவும். முன்னோர்கள் குலதெய்வத்தை வழிபடவில்லை என்று இங்கு ஒருவர் கூறினார். பித்ரு தோஷம் உண்டா? 

வாசகர், பாளையங்கோட்டை. 

உங்களுக்கு விருச்சிக லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவானுடனும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவானுடனும் இணைந்திருக்கிறார். இவர்களை பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் இருந்து ஆட்சி பெற்றுள்ள பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவான் பார்வை செய்கிறார். லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரிய பகவானையும் குரு பகவான் பார்வை செய்வதால் பித்ரு தோஷம், குல தெய்வக் குற்றம் என்று கூற முடியாது. உங்கள் குல தெய்வமாக அம்மனை வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT