ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் தற்போது +1 படிக்கிறார். படிப்பில் சரியான ஈடுபாடில்லை. எப்போது இந்நிலை மாறும்? நன்றாகப் படித்து நல்ல வேலைக்குச் செல்லும் பாக்கியமுண்டா? ஏதும் தோஷம் உள்ளதா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?  - வாசகி, தாம்பரம்

21st Feb 2020 11:59 AM

ADVERTISEMENT

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். லக்னம் மற்றும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவானுடன் இணைந்திருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானின் மீதும் படிகிறது. தற்சமயம் ராகுபகவானின் தசையும் நடக்கத் தொடங்கி சுய புக்தி 03.10.2020 வரை நடக்கும். கல்வி ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சப்தமாதிபதியான சூரியபகவானுடன் இணைந்து நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். கேதுபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் சிறப்பாகும். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு அவரின் படிப்பில் நடவடிக்கைகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு விடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். அவரின் ஜாதகம் சரியாகவே கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT