ஜோதிட கேள்வி பதில்கள்

வேலைக்குச் செல்வதே சிறப்பு!

DIN


நான் பட்டயக் கணக்காளர் படிப்பில் ஒரு குரூப் மட்டும் தேர்ச்சி அடைந்துள்ளேன். எப்பொழுது ஆடிட்டர் படிப்பை முழுமையாக முடிப்பேன்? வேலைக்குச் செல்வது அல்லது ஆடிட்டர் தொழில் செய்வது, இதில் எது எனக்கு ஏற்றது? 

பிரதீப், நாமக்கல்.

உங்களுக்கு மேஷ லக்னம், சிம்ம நவாம்சம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம் நாலாம் பாதம் என்று வருகிறது. லக்னம், அஷ்டமாதிபதி செவ்வாய் பகவான் லக்னத்தில் மூலத் திரிகோணம் பெற்று பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தையும் பெற்று நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியை அடைகிறார். 
அவருடன் தைரிய ஸ்தானாதிபதி மற்றும் ஆறாமதிபதியான கல்வி காரகர் புத பகவானும் இணைந்திருக்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சூரிய பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். 
பாக்கியாதிபதி, அயன ஸ்தானாதிபதியான குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே மூலத் திரிகோணம் பெற்று, ஐந்தாம் பார்வையாக லக்னத்தையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம்), புத பகவானையும், ஏழாம் பார்வையாக மிதுன ராசியையும் அங்கமர்ந்திருக்கும் இரண்டு, ஏழாம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிர பகவானையும், ஒன்பதாம் பார்வையாக ஐந்தாம் வீட்டையும் பார்வை செய்கிறார். 
சுக்கிர பகவான் நவாம்சத்தில் மூலத் திரிகோண ராசியான துலாம் ராசியை அடைகிறார். தொழில், லாபாதிபதி சனி பகவான் பன்னிரண்டாம் வீட்டில் கேது பகவானுடன் இணைந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். 
தற்சமயம் ராகு பகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் "இண்டர்' முடிந்துவிடும். 2023 -ஆம் ஆண்டுக்குள் பட்டயக் கணக்காளர் ஆகிவிடுவீர்கள். வேலைக்குச் செல்வதே சிறந்ததாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு: அஜீத் தோவல்

முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி: ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிப்பு

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி: ஜொ்மனி அறிவிப்பு

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

SCROLL FOR NEXT