ஜோதிட கேள்வி பதில்கள்

படிப்படியாக உயர்வார்!

18th Dec 2020 12:00 AM

ADVERTISEMENT


என் மகனுக்கு கற்றலில் குறைபாடு என்கிற உபாதை இருந்ததால் சிறப்புப் பள்ளியில் கஷ்டப்பட்டு படித்தார். தற்சமயம் பட்டப்படிப்பை சரியான காலத்தில் முடித்து விட்டார். இவருக்கு ஒரு பெரிய கம்பெனியில் இந்த குறைபாட்டிற்கு ஏற்றாற்போல் வேலை செய்யப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

வாசகி, மும்பை.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னம், ஆறாமதிபதி எட்டாம் வீட்டில் மூன்றாம் வீட்டுக்கதிபதியான சந்திர பகவானுடன் இணைந்திருக்கிறார். முயற்சி ஸ்தானாதிபதி நவாம்சத்தில் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. இதனால் அவரின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். 

கல்வி ஸ்தானாதிபதி சூரிய பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். கல்விகாரகர் புத பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியாகி, தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் (திரிகோணாதிபதி உச்ச கேந்திரத்தில் அமர்வது), திக் பலம் பெற்றிருக்கும் ஏழு, பன்னிரண்டாம் அதிபதியான செவ்வாய் பகவானுடன் இணைந்து இருப்பதாலும், அவர் தேர்வாகி இருக்கும் கம்பெனியில் கொடுக்கப்படும் பயிற்சிகளைப் புரிந்துகொண்டு செய்து வேலையைப் பெற்று விடுவார். உத்தியோகத்தில் படிப்படியாக உயர்ந்து நல்ல நிலையையும் எட்டி விடுவார். லக்னாதிபதி சந்திர பகவானை குரு பகவான் பார்வை செய்வதால் உடலும் மனமும் சீர்பட்டு எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி தினமும் "நமசிவாய' என்று ஜபித்து வரவும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT