ஜோதிட கேள்வி பதில்கள்

அடுத்த ஆண்டில் திருமணம்

DIN


எனது மகள் முனைவர் பட்டம் பெற்று கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அவருடைய திருமணம் எப்பொழுது நடக்கும்?

-வாசகர், தூத்துக்குடி.

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம்,  கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். லக்னம், கல்வி ஸ்தானாதிபதி புதன் பகவான் எட்டாம் வீட்டில் அமர்ந்து குடும்ப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். பூர்வ புண்ணிய, அயன ஸ்னாதிபதியான சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண ராசியை அடைகிறார்.  பாக்கிய ஸ்தானத்தில் சூரிய,  ராகு பகவான்களும் இணைந்திருக்கிறார்கள்.  

அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும்,  பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் ஏழாம் வீட்டில் திக்பலம் பெற்றிருப்பதும் சிறப்பு. ஆறாம் வீட்டிற்கும்,  லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லாபஸ்தானத்திலேயே மூலத்திரிகோணம் பெற்றிருக்கிறார். களத்திர நட்பு ஸ்தானத்திற்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குரு பகவான் அயன ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய யோகம் தோஷம் நீங்கப்பெற்று ஐந்தாம் பார்வையாக நான்காம் வீட்டிலுள்ள சந்திர பகவானையும் (குருச் சந்திர யோகம்),  ஆறாம் வீட்டையும், எட்டாம் வீட்டிலுள்ள லக்னாதிபதியையும் பார்வை செய்கிறார். தற்சமயம் ராகு மஹா தசையில் பிற்பகுதி நடக்கிறது.  அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

SCROLL FOR NEXT