ஜோதிட கேள்வி பதில்கள்

உங்கள் ஆசை நிறைவேறும் 

21st Aug 2020 06:00 AM

ADVERTISEMENT


நான் பன்னிரண்டாம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்று மருத்துவப் படிப்பைத் தொடர இருக்கிறேன். என் தாத்தாவின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவருக்கு வயது 74. நான் மருத்துவராகி, பட்டம் பெற்று அவரிடம் ஆசி பெறும் பாக்கியம் எனக்குண்டா? 

}வாசகி, அருப்புக்கோட்டை.

உங்கள் தாத்தாவுக்கு மிதுன லக்னம் என்று வருகிறது. கடக லக்னம் அல்ல. லக்னாதிபதி, சுகாதிபதியான புத பகவான் இரண்டாம் வீட்டில், அஷ்டம, பாக்கியாதிபதியுடன் இணைந்து, அவர்கள் இருவரின் பார்வையும் அஷ்டம ஆயுள் ஸ்தானமான, எட்டாம் வீடான மகர ராசியின் மீது படிகிறது. எட்டாம் வீட்டுக்கதிபதி அதுவும் ஆயுள் காரகரான சனி பகவானுமாகி, தன் ஆட்சி வீட்டைப் பார்ப்பதும் சிறப்பு. எட்டாம் வீட்டிற்கு எட்டாம் வீடான மூன்றாம் வீட்டில் மூன்றாமதிபதியான சூரிய பகவான் ஆட்சி பெற்றிருப்பதும் சிறப்பு. ஆரோக்ய ஸ்தானமான ஆறாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய் பகவான், சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருக்கும் பூர்வ புண்ணியாதிபதியான சுக்கிர பகவானுடன் இணைந்திருப்பதால் உங்கள் தாத்தாவின் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. அதனால் அவருக்கு தீர்க்காயுள் உண்டு. உங்கள் ஆசை நிறைவேறும்.

Tags : ஜோதிட கேள்வி பதில்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT