ஜோதிட கேள்வி பதில்கள்

குலதெய்வம் முருகன்

21st Aug 2020 06:00 AM

ADVERTISEMENT


நான்  டிப்ளமோ (சிவில்) படித்து இருக்கிறேன். எனது ஜாதகப்படி அரசு வேலை அமையுமா? எங்கள் குலதெய்வம் தெரியவில்லை. அதையும் கூறவும்! 

வாசகர், காரைக்கால். 

உங்களுக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னம், ஆறாமதிபதியான செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றமர்ந்திருக்கிறார். இரண்டாம் வீட்டிற்கும் ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் ஐந்தாம் வீட்டில் உச்சம் பெற்றுள்ள சுக்கிர பகவானுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதியான ஒன்பதாமதிபதியும், பத்தாமதிபதியும் நான்காம் வீட்டில் அஷ்டம லாபாதிபதியுடன் இணைந்திருக்கிறார்கள். இதனால் தர்மகர்மாதிபதி யோகம், புத ஆதித்ய யோகம் ஆகிய யோகங்கள் உண்டாகின்றன. மூன்றாம் வீட்டிற்கும், நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று தற்சமயம் தசையை நடத்துகிறார். அரசு கிரகங்கள் வலுவாக அமைந்திருப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை அமையும். வங்கி, காப்பீடு, கூட்டுறவுத் துறைகளும் ஏற்றது. உங்கள் குலதெய்வம் முருகப் பெருமானாவார். 

Tags : ஜோதிட கேள்வி பதில்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT