ஜோதிட கேள்வி பதில்கள்

ஒளஷத காரகரின் சுப பலம்! 

21st Aug 2020 06:00 AM

ADVERTISEMENT

 

எனக்கு வயிற்றில் புற்றுநோய். அறுவை சிகிச்சை செய்த பின்பு உடல் முழுதும் பரவிவிட்டது. தற்சமயம் கீமோ தெரபி, மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறேன். எப்பொழுது குணமடையும்? பொதுத்தொண்டு மற்றும் தர்ம காரியங்கள் பலவற்றைச் செய்த குடும்பம் எங்களுடையது. நோய் விரைவில் தீர பரிகாரம் கூறவும். 

வாசகி, பெங்களூரு.

உங்களுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி, விசாக நட்சத்திரம். லக்னம், ருணம் (கடன்), ரோகம் வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் எட்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று வர்கோத்தமத்தில் சுகாதிபதியான சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) சுகாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். சூரிய பகவானும் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். குடும்பாதிபதி மற்றும் பூர்வ புண்ணியாதிபதியான புத பகவான் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். புத பகவானுக்கு "மணி மந்திர ஒüஷத காரகர்' என்று பெயர்.

ADVERTISEMENT

தர்மகர்மாதிபதியான சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மகர ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானாதிபதியும், தனு (உடல்) காரகருமான சந்திர பகவான் ஆறாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைகிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் வர்கோத்தமத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) வர்கோத்தமம் பெற்றிருக்கும் அஷ்டம (எட்டு) லாபாதிபதியான குரு பகவானுடனும், ராகு பகவானுடனும் இணைந்திருக்கிறார் குரு பகவானின் ஐந்தாம் பார்வை தன் மூலத்திரிகோண வீடான எட்டாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் தனக்கு வீடு கொடுத்த சுக ஸ்தானாதிபதியான சூரிய பகவானையும் (சிவராஜயோகம்), லக்னாதிபதியான சுக்கிர பகவானையும், ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும், ஒன்பதாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். "குரு பார்க்க கோடி புண்ணியம்; கோடி பாவ நிவர்த்தி' என்பது ஜோதிட வழக்கு. பொதுவாக ஒருவர் வியாதியை எதிர்கொண்டு மீண்டு வந்துவிடுவாரா என்பதற்கு லக்னாதிபதி ஆறாமதிபதியை விட பலம் பெற்றிருக்க வேண்டும். லக்னமும் சுப பலம் பெற்றிருக்க வேண்டும். லக்னத்தை சுபகிரகங்கள் பார்க்க வேண்டும். மற்ற இரண்டு திரிகோணாதிபதிகளும் வலுப்பெற்றிருக்க வேண்டும். புத பகவான் சப்தம கேந்திரத்திலும், சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் வலுப்பெற்றிருக்கிறார்கள். தற்சமயம் புத மஹா தசையில் ராகு பகவானின் புக்தி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் நடக்கும். அந்த காலக் கட்டத்திற்குப் பிறகு உடல் நலம் சீரடைந்து விடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

Tags : ஜோதிட கேள்வி பதில்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT