ஜோதிட கேள்வி பதில்கள்

சுக லாபாதிபதி உச்சம் 

21st Aug 2020 06:00 AM

ADVERTISEMENT

எனக்கு வயது 30. தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராகப் பணியாற்றி வருகிறேன். வருமானம் குறைவாக உள்ளது. எனது திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. எப்பொழுது திருமணம் நடைபெறும்? 

வாசகர், பொள்ளாச்சி.

உங்களுக்கு கடக லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதிபதி வளர்பிறைச் சந்திரனாகி தைரிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணியாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. ஆறாம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ஆறாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக எட்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானையும் (குருமங்கள யோகம்) பார்வை செய்கிறார். குடும்பாதிபதி தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் திக்பலம் பெற்று புத பகவானுடன் இணைந்திருக்கிறார். சுக லாபாதிபதியும் உச்சம் பெற்றமர்ந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதும் சிறப்பு. தற்சமயம் குரு மஹா தசையில் முற்பகுதி நடக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு திருமணம் நடக்கும். உத்தியோகத்திலும் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல நிலையை எட்டி விடுவீர்கள். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும். 

Tags : ஜோதிட கேள்வி பதில்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT