ஜோதிட கேள்வி பதில்கள்

தர்மகர்மாதிபதி யோகம் 

21st Aug 2020 06:00 AM

ADVERTISEMENT


என் தம்பி மகள் முதுநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். அரசு தேர்வுகளையும் எழுதி வருகிறார். அவருக்கு அரசு பணி கிடைக்குமா? திருமணம் எப்பொழுது அமையும்? 

வாசகர், பண்ருட்டி.

உங்கள் தம்பி மகளுக்கு துலாம் லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதி, இரண்டு மற்றும் ஏழாம் வீட்டிற்கதிபதியான செவ்வாய் பகவானுடனும், சந்திர பகவானுடனும் (சந்திரமங்கள யோகம்) ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார். ஒன்பதாமதிபதியான புத பகவான் பத்தாம் வீட்டில் லாபாதிபதியான சூரிய பகவானுடன் இணைந்திருக்கிறார். தர்மகர்மாதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் முழுமையான தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. மூன்று மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான குரு பகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்றமர்ந்து ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் ஒன்பது மற்றும் பதினொன்றாம் அதிபதியான புதன், சூரிய பகவான்களையும், ஏழாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக இரண்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற துலாம் லக்னத்திற்கு ராஜயோக கிரகமான சனி பகவானின் தசையில் கேது பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுக்குள் அரசு பணி கிடைக்கும். இந்த காலக் கட்டத்திற்குள் தகுந்த வரன் அமைந்து திருமணமும் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும். மற்றபடி குடும்ப வாழ்க்கை சீராக அமையும்.

Tags : ஜோதிட கேள்வி பதில்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT