ஜோதிட கேள்வி பதில்கள்

நட்சத்திர சந்தி - பத்ர யோகம்

14th Aug 2020 06:00 AM

ADVERTISEMENT


என் மகனுக்கு கிருத்திகை நட்சத்திரமா? அல்லது ரோகிணி நட்சத்திரமா? என்பதில் குழப்பம். நாடி ஜோதிடம் பார்த்ததில் கிருத்திகை நட்சத்திரம் என்று வந்தது. ஆனால் கிரகங்கள் மாறிவிட்டன. எது சரி? அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? எந்தத் திசையில், எப்படிப்பட்ட பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? 

-வாசகி, திருவள்ளூர்.

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். பிறப்பில் சந்திர பகவானின் தசையில் கர்ப்பச் செல் போக இருப்பு 9 வருடங்கள், 8 மாதங்கள், 15 நாள்கள். இதுபோல் இருப்பதை "நட்சத்திர சந்தி' என்பார்கள். லக்னம், நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள சுக்கிர பகவானையும், ஏழாம் பார்வையாக லக்னத்திலமர்ந்திருக்கும் சனி பகவானையும், ஒன்பதாம் பார்வையாக மூன்றாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானையும் பார்வை செய்கிறார். ஐந்தாம் வீட்டிற்கும், பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பத்தாம் வீட்டில் தர்மகர்மாதிபதிகளுடன் (சூரிய புத பகவான்களுடன்) இணைந்திருக்கிறார். இதனால் புத ஆதித்ய யோகம், பஞ்சமகா புருஷ யோகங்களிலொன்றான "பத்ர யோகம்', மற்றும் பத்தாம் வீட்டில் சூரிய, செவ்வாய் பகவான்கள் திக் பலம் பெற்றிருப்பதும் சிறப்பு. களத்திர, தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் மூலத் திரிகோணம் பெற்றிருப்பதால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தென்கிழக்கு திசையிலிருந்து, படித்த நல்ல வேலையிலுள்ள சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். 

தற்சமயம் ராகு பகவானின் தசையில் சுக்கிர புக்தி இந்த ஆண்டு இறுதி வரை நடப்பது சிறப்பாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT