உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி தொழில் ஸ்தானாதிபதியுடன் தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். இவர்களை பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கும் குருபகவான் பார்வை செய்கிறார். இதனால் குருமங்கள யோகம், சிவராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகிறது. குருபகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானின் மீதும் ஒன்பதாம் பார்வை பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் சனிபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.