உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். பிறப்பில் சந்திரமகா தசை இருப்பு 1 வருடம், 0 மாதம், 28 நாள்கள் என்று கணிக்கப்பட்டுள்ள ஜாதகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. குருபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய், புத பகவான்களையும், அயன ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானையும் பார்வை செய்கிறார். தற்சமயம் குருபகவானின் தசையில் சுக்கிர புத்தி நடப்பதால் அடுத்த ஆண்டு, ஜூன் மாதத்திற்குள் படித்த பெண் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.