உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்றமர்ந்து சுகாதிபதியான சந்திரபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி, களத்திர ஸ்தானத்திலேயே ராகுபகவானின் சாரத்தில் ஆட்சி பெற்று லக்ன சுபர்களான சூரியன், குரு, புத பகவான்களுடன் இணைந்திருக்கிறார். அதனால் அந்நியத்தில் தென்மேற்கு திசையிலிருந்து படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். வங்கி, காப்பீடு போன்ற துறைகளில் வேலை அமையும்.