உங்கள் மகனுக்கு மீன லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். களத்திர ஸ்தானத்தில் செவ்வாய்பகவான் தன, பாக்கியாதிபதியாகி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் சாரத்தில் அமர்ந்து நீச்சபங்க ராஜயோகம் பெற்று உள்ள குரு பகவானால் பார்க்கப்படுவதால் குருமங்கள யோகம் உண்டாகிறது, செவ்வாய் தோஷமும் இல்லை என்று கூற வேண்டும். களத்திர ஸ்தானாதிபதி புதபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து இருப்பதும் சிறப்பு. தற்சமயம் லாபாதிபதியான சனிபகவானின் தசையில் செவ்வாய்பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.