உங்களுக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானாதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் கேதுபகவானுடன் அமர்ந்து சுக ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணியாதிபதி செவ்வாய்பகவான் அயன ஸ்தானத்தில் சந்திரபகவானுடன் இணைந்திருப்பதால் இருவருக்கும் விபரீத ராஜயோகம் உண்டாகிறது. தற்சமயம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. இது யோக தசையாக உள்ளதால் படிப்படியாக உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறையும். கோசாரத்திலும் குருபகவானும் சனிபகவானும் அனுகூலமாக இருப்பது சிறப்பு. இதனால் உடனடியாக பொருளாதாரம் உயரக் காண்பீர்கள். மணவாழ்க்கை குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.