என் மகள் வயிற்றுப்பேரனுக்கும், அவரது பெற்றோருக்கும் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? தாய்க்கு அரசுப்பணி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா? - வாசகர், மதுரை

உங்கள் பேரனுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று தற்சமயம் தசையை நடத்தத் தொடங்கியுள்ளார்.

உங்கள் பேரனுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று தற்சமயம் தசையை நடத்தத் தொடங்கியுள்ளார். பித்ரு காரகரான சூரியபகவான் ஆட்சி பெற்றிருப்பதும் அன்னை காரகர் சந்திரபகவான் குருபகவானின் சாரத்திலும் அமர்ந்து சுகம் மற்றும் பாக்கிய ஸ்தானங்கள் வலுவாக இருப்பதால் பெற்றோருக்கும் நன்மையே உண்டாகும். தாய் ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்திருப்பதால் அன்னைக்கு அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். படிப்படியாக அவரின் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com