என் மகனுக்கு திருமணம் நடைபெறுமா? எப்போது கைகூடும்? தலையில் பிரச்னை இருக்கிறது. மனோ தத்துவ மருத்துவரிடம் செல்ல மறுத்ததால் ஆயுர்வேத மருத்துவம் பார்த்து வருகிறோம். சரியாகுமா? சட்டப்படிப்பு படித்திருப்பதால் வழக்கறிஞர் தொழில் செய்வாரா? அல்லது சட்டம் சம்பந்தப்பட்ட வேலைக்குச் செல்வாரா? - வாசகர், தென்காசி

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி, சூரியன், செவ்வாய் பகவான்களுடன் இணைந்திருக்கிறார்.

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி, சூரியன், செவ்வாய் பகவான்களுடன் இணைந்திருக்கிறார். அஷ்டம பாக்கியாதிபதியான சனிபகவான் லக்னத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் உள்ள குருபகவானின் ஐந்தாம் பார்வையை பெறுகிறார். குருபகவான் ஏழாம் பார்வையாக சந்திரபகவானைப் பார்வை செய்கிறார். இதனால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. குருபகவான் ஒன்பதாம் பார்வையாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் லக்ன சுபர்களைப் பார்வை செய்கிறார். தற்சமயம் ஆறாம் வீட்டில் அமர்ந்து அஷ்டலட்சுமி யோகத்தைப் பெற்றிருக்கும் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அவருக்கு தற்சமயம் எடுத்து வரும் ஆயுர்வேத சிகிச்சையில் குணமடையும். 2021 - ஆம் ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com