எனக்கு அரசுத் தேர்வில் வெற்றிகிடைக்குமா? அரசாங்க வேலை கிடைக்குமா? - வாசகர், வலங்கைமான்

உங்களுக்கு மகர லக்னம், மிதுன ராசி. லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று அமர்ந்து பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகாயோகத்தைக் கொடுக்கிறார்.

உங்களுக்கு மகர லக்னம், மிதுன ராசி. லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று அமர்ந்து பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகாயோகத்தைக் கொடுக்கிறார். அதோடு குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்னம், தைரியம், பூர்வபுண்ணிய ஸ்தானங்களை பார்வை செய்கிறார். பாக்கியாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணியாதிபதியான சுக்கிரபகவான் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சந்திரபகவானுக்கும் குருபகவானுக்கும் கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. தற்சமயம் சனிமகா தசையில் பாக்கியாதிபதியான புதபகவானின் புக்தி நடக்கிறது. சுக்கிரபகவானின் புக்தியில் முற்பகுதியில் அரசு வேலை கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com