ஜோதிட கேள்வி பதில்கள்

எங்கள் மகன் பி.இ., எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படித்துள்ளார். தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? பெண் சொந்தத்தில் அமையுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?  - வாசகர், ராசிபுரம்

19th Jul 2019 10:53 AM

ADVERTISEMENT

உங்கள் மகனுக்கு மீன லக்னம், மிதுன ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தையும் லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் உச்சம் பெற்ற சுக்கிரபகவானையும் தைரிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரிய, புத, கேது பகவான்களையும் பார்வை செய்கிறார். மாளவிகா யோகம், புதஆதித்ய யோகம், கஜகேசரி யோகம், நீச்சபங்க ராஜயோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அரசு வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அந்நிய உறவில் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT