ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை. நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்?  - வாசகர், கொடுமுடி

12th Jul 2019 10:47 AM

ADVERTISEMENT

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்ன, தொழில் ஸ்தானாதிபதி லக்னத்தில் உச்சம் பெற்று தன, பாக்கியாதிபதியான சுக்கிரபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று பூர்வபுண்ணியாதிபதி, லாபாதிபதி மற்றும் ராகுபகவான்களுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதும் சிறப்பாகும். அவருக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் ஒருபொழுது விரதமிருந்து குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரச் சொல்லவும்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT