ஜோதிட கேள்வி பதில்கள்

அதிகம் உழைக்கிறேன். ஆனால் பலன் சுமாராகவே உள்ளது. வணிகத்திலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?  - வாசகர், பரமக்குடி

12th Jul 2019 10:45 AM

ADVERTISEMENT

உங்களுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தன, பூர்வபுண்ணியாதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானத்திலும், தர்மகர்மாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்திலும் அமர்ந்து குடும்ப ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரிய, செவ்வாய் பகவான்களையும் சுகஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் லக்னாதிபதியையும் மற்றும் ஆறாம் வீட்டையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. இதனால் செய்தொழிலும் வாழ்க்கையும் படிப்படியாக மேன்மையை அடையும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT