ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு 62 வயதாகிறது. சூரிய தசையிலிருந்து நன்மைகள் ஏற்படத் தொடங்கியது. சந்திர தசை மிகவும் நன்றாக இருந்தது. நிலம் மனை வாங்கினேன். செவ்வாய் தசையும் நன்றாகவே சென்றது. ராகு தசை சுய புக்தியிலும் புதிய அதிர்ஷ்டம் ஏற்பட்டது. தற்சமயம் செய்தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டது. சொந்த வீட்டை விற்றால்தான் கடன் அடைந்து நிம்மதியாக வெளியே வரமுடியும் என்கிற நிலை. வீட்டை விற்றுத்தான் ஆக வேண்டுமா? சுக்கிரன் வீடான ஒன்பதில் குரு சாரத்திலிருந்து ராகு, தசையை நடத்துவதால் நன்மை செய்யாவிட்டாலும் கெடுக்கமாட்டார் என்று இ

6th Dec 2019 04:11 PM

ADVERTISEMENT

உங்களுக்கு கும்ப லக்னம் அல்ல. மீன லக்னம் என்று வருகிறது. மேஷ ராசி அல்ல, மீன ராசி, ரேவதி நட்சத்திரம். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி சந்திரபகவான் லக்னத்தில் அமர்ந்திருப்பது லக்னம் என்கிற உயிர் ஸ்தானத்திற்கு வலுசேர்க்கும் அமைப்பாகும். சந்திரபகவானை "தனு' (உடல்) காரகர் என்றழைப்பார்கள். உடல் காரகரான சந்திரபகவான் உயிர் ஸ்தானமான லக்னத்தில் அமர்ந்திருப்பது மேலும் லக்னமும் ராசியும் ஒன்றாக அமைந்திருப்பதும் சிறப்பாகும். இதனால் நல்ல வாய்ப்புகள் தானாகவே தேடிவரும்.
 லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். பொதுவாக, ஏழாம் வீடு என்பது பரந்த உள்ளம், சமுதாயத்தில் உயர்ந்த மரியாதை, கௌரவம், தூரதேசப் பயணம், நண்பர்களால் உதவி, ஆதரவு, வாழ்க்கைத்துணை ஆகியவைகளைக் குறிப்பாக உணர்த்தும் வீடாகும். ஏழாம் வீட்டில் லக்னாதிபதி இருப்பது சிறப்பாகும்.
 குருபகவானின் ஐந்தாம் பார்வை லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானின் மீதும் படிகிறது. இதனால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. சந்திர, குரு பகவான்கள் சமசப்தமமாக (நேருக்கு நேர்) இருப்பது முதல்தர கஜகேசரி யோகமாகும். இந்த யோகத்தால் ஜாதகத்தில் வேறு தோஷங்கள் இருந்தாலும் அவைகள் பலகீனமடைகிறது. அதாவது தோஷத்தின் கெடுபலன் உண்டாகாமல் காப்பாற்றப்படும் நிலை ஏற்படும். இந்த யோகத்தால் குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அதுபோல் திடீரென்று வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
 குருபகவானின் ஒன்பதாம் பார்வை மூன்றாம் வீட்டின்மீது படிகிறது. தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) நீச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். செவ்வாய்பகவான் நீச்சம் பெற்றிருக்கும் கடக ராசியில் உச்சம் பெறும் கிரகம் குருபகவானாவார். இந்த குருபகவான் லக்ன கேந்திரத்திலும், சந்திர கேந்திரத்திலும் இருப்பதால் செவ்வாய்பகவான் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார்.
 தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் உச்சம் பெறுகிறார். ஆயுள் ஸ்தானம் என்பது எட்டாம் வீடாகும். பாவாத் பாவம் என்கிற வழக்கிற்கு அடிப்படையில் பார்த்தால் எட்டாம் வீட்டிற்கு எட்டாம் வீடு மூன்றாம் வீடாகும். மூன்றாம் வீட்டில் ஆயுள் புதைந்திருக்கிறது என்பார்கள். இந்த மூன்றாம் வீட்டுக்கதிபதி ராசியிலும் நவாம்சத்திலும் அதிபலம் பெற்றிருப்பது உங்களுக்கு தீர்க்காயுள் உண்டாகும் என்று அறிய வேண்டும்.
 சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சுய சாரத்தில் (ஆயில்யம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறான். இரண்டு கேந்திரங்களுக்கு அதிபதியான கிரகம் திரிகோண ராசியில் அமர்ந்திருப்பதாலும் சுபாவ அசுபக் கிரகங்களுடன் இணைந்திருப்பதாலும் புதபகவானுக்கு கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெறுகிறது. ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்திற்கு அதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான சிம்ம ராசியை அடைகிறார்.
 ஆறாமதிபதி ராசியிலும் நவாம்சத்திலும் அதிபலம் பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அயன, மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுயசாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். லாபாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது ஒரு சிறப்பான தன யோகமாகும். சனிபகவான் தன் ஆட்சி வீடான மகர ராசியைப் பார்வை செய்வது உங்களுக்கு தீர்க்காயுள் உண்டு என்றும் கூறமுடிகிறது. கேதுபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். ராகுபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். ரிஷப ராசி ராகுபகவானுக்கு நீச்சவீடு என்று சில கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளது.
 உங்கள் வாழ்க்கை மீன லக்னம், மீன ராசி போலவே நடைபெற்றது என்று நினைக்கத் தோன்றுகிறது. சந்திரமகா தசை கும்ப லக்னத்திற்கு ஆறாமதிபதி தசையாகி நீங்கள் அடைந்த சராசரிக்கும் சற்று கூடுதலான அதிர்ஷ்டங்கள், யோகங்கள் (பெரிய அளவுக்கு எதிர் நீச்சல் போடாமல்) இத்தகைய விதத்தில் சிந்திக்க தூண்டுகிறது. செவ்வாய்பகவானின் தசை கும்ப லக்னத்திற்கும் யோக தசையாக அமைந்துவிட்டதால் நீங்கள் கும்ப லக்னமாகவே கொண்டு முடிவுகளை எடுத்துள்ளீர்கள். ராகுபகவானின் தசை ஏழாவது தசையாக நடந்தால் துயர் தரும் தசை என்று ஒரு ஜோதிட விதி உள்ளது. அதேநேரம் இந்த கிரகங்களை செவ்வாய், சனி, சூரியபகவான்கள் இணைந்தாலும் பார்த்தாலும் கஷ்டங்கள் மறைந்து யோகங்கள் உண்டாகும் என்று விதிவிலக்காகக் கூறப்பட்டுள்ளது.
 கடன்கள் வலுக்க லக்னாதிபதியை விட ஆறாமதிபதி சற்று கூடுதல் பலம் பெற்றிருக்க வேண்டும். உங்களுக்கு ஆறாமதிபதி லக்னாதிபதியை விட சிறிதே பலம் கூடப் பெற்றிருக்கிறார். இருப்பினும் இன்னும் மூன்றாண்டுகள் கடன் தொல்லைகளிலிருந்து முழுமையாக விடுபட வாய்ப்பு குறைவாக இருப்பதால் வீட்டை விற்றே கடனை அடைக்க வேண்டிவரும். மேற்கூறிய காலகட்டத்திற்குப்பிறகு ஏஜென்ஸி, வர்த்தகம் (டிரேடிங்) துறையில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். லக்ன சந்தி, ராசி சந்தி, நட்சத்திர சந்திர ஆகிய மூன்றும் உங்கள் ஜாதகத்தில் உள்ளதால் கவனத்துடன் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்கவும். உங்கள் ஜாதகம் வலுவாக உள்ளதால் மறுபடியும் பழைய நிலையை உறுதியாக எட்டி விடுவீர்கள். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT