உங்களுக்கு கும்ப லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். லக்னாதிபதி தைரிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சூரியபகவானால் பார்க்கப்படுகிறார். புத்திர ஸ்தானாதிபதி புதபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். குருபகவானும் புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.இதனால் புத்திர பாக்கியம் உண்டு. களத்திர, நட்பு, ஸ்தானாதிபதி சூரியபகவான் அயன ஸ்தானத்தில் சுக, பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் சுயபுக்தி முடியும் தறுவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு உடனடியாகத் திருமணம் கைகூடும். தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும். பகுதி நேரமாக விவசாயத்தையும் பார்க்கலாம். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானையும் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.