உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதி லக்னத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். தன, பாக்கியாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதியான சுக்கிர, சனி பகவான்கள் குடும்ப ஸ்தானத்தில் முறையே, மூலதிரிகோணம், உச்சம் பெற்றிருக்கிறார்கள். களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் சுக ஸ்தானத்தில் மூலதிரிகோணம் பெற்று செவ்வாய்பகவானுடன் இணைந்திருப்பதால் குருமங்கள யோகம் உண்டாகிறது. தற்சமயம் உச்சம் பெற்றிருக்கும் சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இது யோக தசையாக ஆவதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தகுதியான நிரந்தர வேலையும் திருமணமும் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை. எதிர்காலம் சிறப்பாக அமையும்.