ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு வயது 29. இன்னும் திருமணம் ஆகவில்லை. இரண்டு ஆண்டுகளாக பெண் பார்த்து வருகிறோம். தனியார் கல்லூரியில் வேலை பார்க்கிறார். எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? எப்போது திருமணம் ஆகும்? அரசு வேலை கிடைக்குமா? அவருக்கு நாகதோஷம் உள்ளது. அதேபோன்று தோஷமுள்ள பெண்ணைத்தான் பார்க்க வேண்டுமா?  - வாசகர், ராசிபுரம்

30th Aug 2019 11:19 AM

ADVERTISEMENT

உங்கள் மகனுக்கு மகர லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். சர்ப்ப தோஷமுள்ளது. களத்திர ஸ்தானத்தில் குருபகவான் உச்சம் பெற்று லாப ஸ்தானம் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவான், தைரிய ஸ்தானம் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவான்களைப் பார்வை செய்கிறார். குருபகவானின் சேர்க்கையினால் சர்ப்ப தோஷம் குறைகிறது. சிவராஜயோகம், குருசந்திர யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். இதனால் புத்திரபாக்கியம் உண்டு. அவர் கர்மாதிபதியாகவும் ஆவதால் உத்தியோகத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டிவிடுவார். தற்சமயம் சூரியபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். சர்ப்ப தோஷமுள்ள பெண்ணைத்தான் பார்க்கவேண்டுமென்பது இல்லை. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். அரசு வேலை கிடைக்கும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT