ஜோதிட கேள்வி பதில்கள்

பொறியியல் பட்டதாரியான என் மகனுக்கு 30 வயதாகிறது. இன்னும் திருமணம் அமையவில்லை. வேலை வாய்ப்பு, திருமணம் எப்போது அமையும்? எதிர்காலம் எப்படி இருக்கும்?  - வாசகர், மதுரை

23rd Aug 2019 10:56 AM

ADVERTISEMENT

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். களத்திர, நட்பு ஸ்தானத்திற்கும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள பாக்கியாதிபதியுடன் இணைந்து தர்மகர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கிறார். இதனால் திருமணம், உத்தியோகம் இரண்டும் நல்ல முறையில் அமையும். தற்சமயம் உச்சம் பெற்றுள்ள சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடக்கியுள்ளது. அந்த ஆண்டே அவருக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைத்துவிடும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT