ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு தாய் தந்தையருடன் சேர்ந்து வாழும் பாக்கியம் உண்டா? படிப்பில் தடை உள்ளது. குண நலன்கள், வேலை வாய்ப்பு, பிற்கால வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? நல்ல காலம் வருமா?  - வாசகர், தேனி

23rd Aug 2019 10:57 AM

ADVERTISEMENT

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்று உச்சம் பெற்றுள்ள செவ்வாய் பகவானுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் குருபகவானின் தசையில் முற்பகுதி நடக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப்பிறகு அவரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும். படிப்பையும் நல்லபடியாக முடித்து விடுவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பெற்றோருக்கு ஆதரவாக இருப்பார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT