செவ்வாய்க்கிழமை 09 ஜூலை 2019

ஜோதிட கேள்வி - பதில்கள்

என் மகன் வெளிநாட்டில் வேலை செய்த போது எங்களை நன்றாக கவனித்துக்கொண்டார். ஆனால் தற்போது செய்து வந்த வேலை விட்டுவிட்டு, இங்குவந்து வேலை செய்கிறார். என் மகனது இந்த மாற்றம் எப்போது சீராகும்? எங்கள் விருப்பப்படி நாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா?
 - வாசகர், திருப்பூர்

சித்த மருத்துவம் படித்துள்ள என் மகளுக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்?
 - வாசகி, காஞ்சிபுரம்

தற்போது செய்து கொண்டிருக்கும் வியாபாரத் தொழிலிலிருந்து ஓய்வு பெறும்பொருட்டு, சொந்தக் கடையை விலைக்கு விற்றுவிட்டு முதுமை காலத்தில் இறைவழிபாட்டில் கழிக்க விரும்புகிறேன். கடை விரைவில் விற்பனை ஆகுமா?
 - வாசகர், திருச்சி

என் பேத்திக்கு ஜாதகம் எழுதிய ஜோதிடர் பரணி நட்சத்திரம் 1- ஆம் பாதம் என்று குறிப்பிட்டுள்ளார். அதே ஜாதகம் கணினி மூலம் கணிக்கப்பட்டதில் பரணி 2-ஆம் பாதம் என்று வருகிறது. இதில் எது சரி? எப்போது திருமணம் கைகூடும்?
 - வாசகர், தூத்துக்குடி

என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? பெற்றோர் செய்யும் திருமணமாக அமையுமா? ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
 - வாசகர், தில்லி

என் மகனது வாழ்க்கை, எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? வழக்கிலிருக்கும் என் மனைவி பெயரில் உள்ள மாமனாரின் சொத்து நல்ல படியாக எங்களுக்கு கிடைக்குமா? எனக்கு ஒரு விபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடல்நிலை சற்று சரியில்லாமல் இருக்கிறேன். சற்றேனும் குணமாகுமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
 - வாசகர், கும்பகோணம்

தந்தை இல்லாத என் பேத்திக்கு கல்வி நிலை எவ்வாறு உள்ளது? மேல் படிப்பு எந்த துறையில் சேர்ந்தால் பிரகாசிக்கும்? மருத்துவம் படிக்க விரும்புகிறாள். வாய்ப்பு உண்டா? வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளதா? திருமண வாழ்க்கை நன்கு அமையுமா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது?
 - வாசகர், திருப்பூர்

நான் நகை கடையை சிறிய முதலீட்டில் 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். தொழிலில் முன்னேற்றம் இருக்குமா? எனக்கு மூன்று மகன்கள். இரண்டாவது மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். மருமகளுக்கு குறை பிரசவமாகி குழந்தை இறந்து பிறந்தது. எங்களிடம் அடிக்கடி சண்டை போட்டு தாய்வீடு சென்று விடுகிறார். இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பார்களா? குழந்தை பாக்கியம் உண்டா? வெளிநாட்டிலேயே வேலை செய்வாரா? சொந்த வீடு கட்டி வருகிறார். அது எப்போது முடிந்து கிரகபிரவேசம் ஆகும்? மூன்றாவது மகனுக்கு எப்போது திருமணமாகும்?
 

என்னுடைய மகளுக்கு நிரந்தரமான நல்ல வேலை எப்போது கிடைக்கும்? எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய வரன் அமையும்? செவ்வாய்தோஷமுள்ள வரனைத்தான் பார்க்க வேண்டுமா? பொருத்தமான நட்சத்திரங்கள் என்னென்ன?
 - வாசகி, விழுப்புரம்

எனக்கு இதுவரை நிரந்தர உத்தியோகம் இல்லை. நிறைய கம்பெனிகள் மாறிவிட்டேன். திருமண தோஷம் உள்ளதாக கூறுகிறார்கள். நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். திருமணம் நடைபெறுமா? நிரந்தர உத்தியோகம் கிடைக்குமா? வெளிநாடு சென்று வேலை பார்க்கும் வாய்ப்பு உண்டா? புத்திர தோஷம் உள்ளதா?
 - வாசகர், பேராவூரணி