21 ஜூலை 2019

கன்னி

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** கன்னி (VIRGO) இது ஒரு பெண் ராசி. இது ஒரு நில ராசியும்கூட. இதன் அதிபதி புதன். புதனுக்கு இது உச்ச வீடாகவும் மற்றும் மூலத் திரிகோண வீடாகவும் ஆகிறது. இந்த ராசிக்கு ஒரு பெண்ணின் உருவத்தைக் கொடுத்தாலும், இந்த ராசிக்கு உரிய சின்னம் F. புதனுக்கு சுக்கிரன் நண்பனாக இருந்தாலும், இந்த ராசியில்தான் சுக்கிரன் நீச்சமாகிறார். ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் இந்த ராசியில் இருந்தால், அவர்கள் எதிரியின் வீட்டில் இருப்பதாகவே கருதப்படுவார்கள். சனி இருப்பின், அது நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படும். இது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தையும், உள் உறுப்புகளில் குடலையும் குறிக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள், பணம் சேமிக்கும் குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறருக்குத் தெரியாமல் சேமிக்கும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

இன்று

ஜூலை 21

இன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள் பணிகளை ஒழுங்காகச் செய்து முடிக்க முடியாமல் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அரசியல்வாதிகள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9
 

இந்த வாரம்

ஜூலை 19 - ஜூலை 25 (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய) குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எல்லோருக்கும் உதவி செய்வீர்கள். அநாவசிய அலைச்சல்களுக்கும் வீண் செலவுகளுக்கும் பஞ்சமிராது. வரவு செலவு விஷயங்களில் கவனம் தேவை.  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவார்கள். சக ஊழியர்கள் பகைமை பாராட்டுவர். அவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும். வியாபாரிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உதவுவார்கள். புதிய முதலீடுகளில் சற்று கவனத்துடன் ஈடுபடவும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். புதிய குத்தகைகளால் லாபம் கொட்டும்.  அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்படவும். மக்களுக்கு உதவக்கூடிய போராட்டங்களில் மட்டுமே கலந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும்.  பெண்மணிகளுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது. பரிகாரம்: புதனன்று பெருமாளையும் காஞ்சி அத்திவரதரையும் தரிசிக்கவும்.  அனுகூலமான தினங்கள்: 20, 24. சந்திராஷ்டமம்:  25.

இந்த மாதம்

ஜூலை மாத பலன்கள் (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - லாப  ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் அறிவுத் திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும்  வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை.  வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். 

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று  கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம்  நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும். குடும்பத்தில்  எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர்  டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும்.
கலைத்துறையினருக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம்  ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். 

அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.  மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி  இருப்பது நல்லது.

உத்திரம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்  விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.   

ஹஸ்தம்:
இந்த மாதம் பெண்கள் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.  மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

சித்திரை:
இந்த மாதம் காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும்.  சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும்.

பரிகாரம்: புதன்கிழமையில் ஆஞ்சனேயரை வெண்ணை சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26,
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16
 

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் மனதில் இருந்த குழப்பங்கள் விலகிவிடும். மனம் ஒருநிலைப்படும். முன்யோசனையுடன் செயல்களைச் செய்வீர்கள். வறுமையிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் படிப்படியாக கூடத் தொடங்கும். பொன்பொருள் சேர்க்கையும் உண்டாகும். செயல்களில் அவசரம் காட்டாமல் விவேகத்துடன் செயல்படுவீர்கள்.  எதிர்பாராத இடங்களிலிருந்து புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். அகந்தை அகன்று அனைவரிடமும் பணிந்து செல்லும் சுபாவம் கூடும். இதனால் எளிமையாக படாடோபம் இல்லாமல் காரியமாற்றுவீர்கள். உங்களை ஏமாற்ற நினைத்தவர்களே ஏமாறுவார்கள். தெய்வக் காரியங்களில் மனதைச் செலுத்துவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை முன்கூட்டியே புரிந்து கொள்வீர்கள்.  ஏழைஎளியவர்களுக்கும் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கும் உதவி செய்வீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். பதவி உயர்வு, புதிய பொறுப்புகளும் கிடைக்கும். மற்றவர்கள் உங்கள் அறிவுரையை கேட்பார்கள். ஆற்றலுடன் சாதனைகள் செய்து வருமானத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்கிற பழமொழிக்கு ஏற்றபடி செலவுகளையும் விரயங்களையும் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக்கொள்வீர்கள். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் நயமாகப் பேசி பழகுவீர்கள். செயல்களில் குறுக்கு வழியைத் தவிர்த்து நேரிடையாகச் செய்து முடிப்பீர்கள். நெடுநாள்களாக பாதிக்கப்பட்டிருந்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். சமுதாயத்தில் பெருமைமிக்க புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். உயர்ந்தவர்களின் நட்பு தானாகவே கிடைக்கும். வேகமாக இயங்குவீர்கள். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். புனிதப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். அரசு வழியில் சிலருக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். பேச்சில் கண்ணியம் கூடும். உங்களை கேலி பேசியவர்கள் மதித்து நடந்துகொள்ளும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் இந்த ஆண்டு கவனம் சிதறாமல் வேலைகளை பட்டிலிட்டு உழைப்பீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். அலுவலக ரீதியான பயணங்களில் நன்மை உண்டாகும். திடீர் இடமாற்றம் ஏற்பட்டு உங்களை திக்குமுக்காடச் செய்யும்.  இவ்வாண்டு உழைப்பு வீண் போகாது.  வியாபாரிகள் கூட்டுத்தொழிலில் நன்மைகளைக் காண்பார்கள். கொடுக்கல் வாங்கல்களில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள், புதிய சரக்குகளை வாங்கி கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் புதிய வாழ்க்கை வசதிகள் உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்களை அதிகமாக நம்ப வேண்டாம். கால்நடைகளை கவனமாக பராமரிக்கவும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் உயரும். பல வழிகளிலும் வருமானம் கிட்டும். தங்களைச் சார்ந்துள்ள கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயல்வீர்கள். எதிரிகளின் தந்திரங்களை எச்சரிக்கையுடன் கவனித்து வரவும். திட்டமிட்ட வேலைகளில் முன்கூட்டியே யோசித்துச் செயல்படவும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழுவதால் எதையும் ஓர் உத்வேகத்துடன் செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.  கலைத்துறையினர் இந்த ஆண்டு வரவேற்புகள் அதிகரிக்கும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மனதில் எழும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டாம்.  பெண்மணிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவர் உங்களை மதித்து நடப்பார்.  குடும்பத்தில் குழப்பங்கள் குறைந்து அமைதி நிலவும். உங்கள் வாக்குச் சாதூர்யம் கூடும். பொருளாதார நிலையில் சுபிட்சம் காணப்படும். பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் கல்வியில் பெருமைபடும்படியாக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் ஒற்றுமையுடன் இருக்கவும். பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு  சிறப்படையுங்கள். ***** தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2019 (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சியும் வருமானத்தில் உயர்வையும் காண்பீர்கள். சேமிப்புகள் உயரும். இதனால் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். செய்தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். தற்போதுள்ள குழப்பமான நிலை மாறி நிம்மதியான சூழ்நிலை உண்டாகும்.  அசையும் அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். அதன் மூலமும் வருமானம் வரத்தொடங்கும். முக்கிய விஷயங்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் திண்ணமாய் நிறைவேறும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.  பயணங்களால் நன்மைகளைப் பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகளில்  வெற்றி உண்டாகும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். தீராத பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து போய்விடும் காலகட்டமிது. ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உடன்பிறந்தோரின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். வசிக்கும் வீட்டிற்கு பராமரிப்புச் செலவுகளையும் செய்ய நேரிடும். குடும்பத்திலும் சுபச் செலவுகள் செய்ய வேண்டி வரும். பெற்றோர்களுக்கும் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். நேர்வழியில் காரியங்களைச் செய்து புதிய இலக்குகளை எட்டுவீர்கள். பழைய காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த தொழிலை மறுபடியும் புதுப்பித்து தொடங்குவதற்கான மாற்றுத் திட்டங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பீர்கள்.  மகான்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளையும் பெறுவீர்கள்.  தக்க நேரத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து  உதவியும் அதிர்ஷ்ட வாய்ப்பும் கிடைக்கும். கடந்த சில காலமாகவே தீராத வியாதியினால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் அவைகளிலிருந்து முழுவதுமாக விடுபடுவார்கள். உங்களை எதிர்த்தவர்கள் மறைந்து விடுவார்கள். 

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகள், தர்மகாரியங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு புத்தாண்டு விகாரி வருடத்தில் அலுவலக வேலை யாவும் சுமுகமாக முடியும். அலுவலகத்தில் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவீர்கள். 

வேலைகளைக் கவனம் சிதறாமல் பட்டியலிட்டுச் செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது. மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு சில சலுகைகளையும் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். பெரிய கடன்கள் வாங்கி வியாபாரத்தையும் பெருக்க வேண்டாம். கூட்டுத்தொழில் செய்வோர் நண்பர்களிடம் உஷாராக இருக்கவும். விவசாயிகளுக்கு கொள் முதல் அதிகரிக்கும். விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். புதிய தானியங்களைப் பயிரிட்டு நல்ல மகசூலைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த வருமானம் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல் உழைப்பையும் அதிகம் நம்புவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். எதிர்கட்சியினருக்கு சாதுர்யமாக பதிலளிப்பீர்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கு கூடும். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.  கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும்.புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். சமூகத்தில்   பெயர், புகழ் உயரும். சக கலைஞர்களின் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதி காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார் உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.  மாணவமணிகள் சுறுசுறுப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டு தீர்த்துக்கொள்வீர்கள்.  பரிகாரம்: "ஓம் நமோ நாராயணா' மந்திரத்தை உச்சரித்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...