சனிக்கிழமை 11 மே 2019

ரிஷபம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** ரிஷபம் (TAURUS) இது ஒரு பெண் ராசி. பூமி ராசியின் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது ஒரு ஸ்திர ராசியும்கூட. இதற்கு அதிபதி சுக்கிரன். இது மாடு உருவம் கொண்ட ராசி. இதை B என்ற குறியீட்டால் குறிப்பார்கள். ஒரு மாடு இரண்டு கொம்களுடன் கூடிய உருவமாக இருக்கும். இது ஒரு நாலு கால் ராசி. சந்திரன் இங்குதான் உச்சம் பெறுகிறார். பொதுவாக, சனியானவர் கெடுதல் செய்யும் கிரகமாகவே கருதப்படுகிறார். ஆனால், ரிஷபத்துக்கு அவர் ஒன்பது, பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாவதால், யோககாரகனாகக் கருதப்படுகிறார். இந்த ராசி, விவசாயத்தைக் குறிக்கும் ராசி. இதன் அதிபதியான சுக்கிரன், கலைகள், சினிமா துறை, கால்நடைகள் ஆகியவற்றுக்கு அதிபதி. உடல் உறுப்புகளில் இந்த ராசி கழுத்து, தொண்டை ஆகியவற்றைக் குறிக்கும்.​

இன்று

மே 11 இன்று  மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

இந்த வாரம்

(மே 10 - மே 16) (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும். அதேசமயம் புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். அதில் எதிர்பார்த்த லாபம், வருமானம் வராது. சமூகத்தில் செல்வாக்கு வளரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தவும். திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டியே செய்து முடிக்கவும். வியாபாரிகள் வரவேண்டிய பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டவும். கொடுக்கல் வாங்கல்களில் லாபம் காணப்படும். விவசாயிகள் கொள்முதலில் லாபம்  பெறுவர். கால்நடைகளை வாங்கி, உபரி வருமானத்தைப் பெருக்குவர்.  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். போட்டிகளைச் சந்திக்க நேரிடும். போராட்டங்களில் புதிய வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். வருமானமும் இரு மடங்காகும்.  பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பர். எதிர்பாராத உதவிகளைப் பெற்று, செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். மாணவமணிகள்  கல்வியில் அதிக கவனம் செலுத்தவும். எதிர்பார்த்ததைவிட நிறைய மதிப்பெண்கள் பெற முடியும்.  பரிகாரம்: காமாட்சி அம்மனை வேண்டி, தினம் "காமாட்சி விருத்தம்' படிக்கவும்.  அனுகூலமான தினங்கள்: 10, 12.  சந்திராஷ்டமம்:  இல்லை.

இந்த மாதம்

மே மாத பலன்கள் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) உடல் நிலையில் முன்னேற்றத்தை காண விரும்பும் ரிஷப ராசியினரே நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். இந்த மாதம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உங்கள் செயல்களை வீட்டில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம்.

கலைத்துறையினருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தூக்கமில்லாமல் வேலை செய்ய வேண்டி வரும்.
அரசியல்வாதிகள் தொகுதி பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அக்கறை காட்டுவீர்கள். இதனால் தொகுதி மக்களிடம் நற்பெயர் கிட்டும்.

பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர் நலனில்  அக்கறை காட்டுவீர்கள்.

கார்த்திகை
இந்த மாதம் அடுத்தவரை  நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை  தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.

ரோகிணி
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு  பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. 

மிருகசீரிஷம்
இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். 

சந்திராஷ்டம தினங்கள்: 21, 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 15,16
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2019 (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்களில் திறமையுடன் பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். பெரும் பணிகளை ஏற்று நிர்வாகத் திறமையுடன் செயல்படுத்தி புகழடைவீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் உங்கள் சொல்கேட்டு நடப்பார்கள். எதிரிகளின் தொல்லை இராது. எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள்.  ஆன்மிகத்தில்  உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். அடக்கத்துடன் ஆரவாரம் இல்லாமல் காரியமாற்றுவீர்கள். பலவகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குழந்தைகள் பாராட்டுகளும் விருதுகளும் பெறுவார்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்து வருமானம்  வரத் தொடங்கும். வழக்குகள் வெற்றியடையும். அரசு வழியில் நன்மைகள் உண்டாகும்.  களவு போயிருந்த பொருள்கள் திரும்பக் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் உயரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். உடன்பிறந்தோருடன் இணக்கமான உறவை வைத்துக் கொள்வீர்கள். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம். அதனால் ஆகார விஷயங்களில் கவனம் செலுத்தவும். ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். அனைவரிடமும் பாகுபாடு பார்க்காமல் பழகத் தொடங்குவீர்கள். முரண்டு பிடித்த நண்பர்களை உங்கள் வழிக்கு கொண்டு வருவீர்கள்.  சிலர் சொந்த வீடு வாங்கி குடிப்பெயர்வார்கள். இதுவரை இருந்து வந்த நேர்முக மறைமுக எதிர்ப்புகள் மறையும். போட்டி பந்தயங்களிலும் ஏஜென்ஸி, கமிஷன் போன்றவைகளிலும் ஆதாயம் கிடைக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். அரசாங்கத்திலிருந்து இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். அனுகூலம் தரும் சில பயணங்களைச் செய்வீர்கள். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மற்றபடி குடத்திற்குள் இட்ட விளக்காக இருந்தவர்கள் வெளிச்சத்திற்கு வரும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் இந்த ஆண்டு அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதனால் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுலக ரீதியான பயணங்களைச் செய்வீர்கள்.  வியாபாரிகள் வாடிக்கையாளைர்களின் ஆதரவு நிறைந்திருப்பதால் தைரியமாக புதிய கடைகளைத் திறப்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபத்தைக் காண்பீர்கள். புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் ஒற்றுமை ஓங்கும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும்.  விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். கூடுதல் வருமானத்தைப் பெற காய்கனிகளைப் பயிரிடுவீர்கள். விவசாயத்தைப் பெருக்க  புதிய உபகரணங்கள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதையை அதிகரித்துக் கொள்வீர்கள். பிரசாரங்களிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உட்கட்சிப்பூசல்களில் மாட்டிக்கொள்ளாமல் கவனத்துடன் இருக்கவும்.  கலைத்துறையினருக்கு புகழும் பொருளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். வசீகரப்பேச்சினால் அனுகூலங்களைக் காண்பீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சேமிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெற்றோரிடமிருந்து பாகப்பிரிவினை மூலம் சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார அபிவிருத்தி உண்டாகும்.  ஆன்மிகத்தில் ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.  மாணவமணிகள் மனதில் உற்சாகத்துடன் பாடங்களைப் படிப்பீர்கள். ஓய்வு எடுப்பதைக் குறைத்துக் கொண்டு பாடங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண்களை அள்ளுங்கள். பரிகாரம்: ஸ்ரீ ராமர், லட்சுமணர், சீதை, அனுமனை ஒரு சேர வழிபட்டு வரவும். ***** தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2019 (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பல துறைகளில் நுழைந்து வெற்றி பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வீர்கள். செய்தொழிலில் படிப்படியாக முன்னேறி இலக்குகளை எட்டி விடுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் உஷாராகவே இருப்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்த சரிவுகள் அகன்று நிலைமை சீரடைந்துவிடும்.   உடலாரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றாரும் மற்றவர்களும் போற்றத்தகுந்த உயர்ந்த நிலையில் நின்று மகிழ்ச்சி கடலில் மிதப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்குத் திருமணமும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் உண்டாகும்.   சிலர் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வார்கள். தெய்வ காரியங்களிலும் மத சம்பந்தமான சடங்குகளிலும் தர்ம காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அரசாங்க ஆதரவு நன்றாக கிடைக்கும். இக்கட்டான தருணங்களில் சமயோசித புத்தியைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கும்.   ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் எந்தவித சிக்கலுமின்றி நன்றாகவே நடக்கும். போதிய அளவுக்கு பணநடமாட்டம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோர்களின் ஆதரவும் நிரம்பக் கிடைக்கும்.  கடினமான விஷயங்களிலும் மனஉறுதியுடன் தாக்குப்பிடித்து வெற்றி பெற்று விடுவீர்கள்.   அரசாங்க ஆதரவும் அரசியல்வாதிகளின் பக்கபலமும் தொடர்ந்து நீடிக்கும். முடியாத காரியமென்று எதுவும் இருக்காது என்ற அளவுக்கு காரியமாற்றுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  இல்லத்தில் திருமணம் மூலம் புதிய உறவினர்களும் கிடைப்பார்கள். உறவினர்கள் மத்தியில்  உங்கள் அந்தஸ்து உயரும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களால் சிறு தொல்லைகள் ஏற்படலாம்.  சில பொருள்கள் திருட்டுப் போகலாம். அதனால் கவனம் தேவை. பழைய காலத்தில் அரிய சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்ட நீங்கள் புதிய சந்தர்ப்பங்களைப் பெறுவீர்கள். எதிரிகளையும் போட்டியாளர்களையும் அரவணைத்துச் செல்வீர்கள்.  பழைய வழக்கு விவகாரங்களில் விட்டுக்கொடுத்து சமரசமாகச் சென்று முடித்துக் கொண்டுவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். மேலதிகாரிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உங்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தால் குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம். பொருளாதார நிலைமை மேம்படும். பேச்சில் வேகம் வேண்டாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.  வியாபாரிகள் பழைய காலத்தை விட வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பார்கள். திறமையை வளர்த்துக்கொள்வீர்கள்.  புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் சிறப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட வழக்குகள் சாதகமாகும். கூட்டுத்தொழிலில்  இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். விவசாயிகள் ஆதாயங்கள் பெற கடினமாக உழைக்க வேண்டி வரும். சந்தையில் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரிடும். கால்நடைகளாலும்  பால் வியாபாரத்தினாலும்  பலன் அடைவீர்கள். அரசியல்வாதிகள் சிறப்புகளைப் பெறுவார்கள். தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். முயற்சிகள் அனைத்தும் பலன் தரும். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். உட்கட்சிப் பூசலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். மாற்றுக் கட்சியினரிடமும் அனுசரித்து நடந்துகொள்ளவும். கலைத்துறையினருக்கு புதிய லாபங்கள் கிடைக்கும். அதன் மூலம் பெயரும் புகழும் பெறுவீர்கள். துறையில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமுதாயப் பணிசெய்து உங்கள் பெயரை மேலும் உயர்த்திக் கொள்வீர்கள்.  பெண்மணிகள் புதிய ஆடை அணிமணிகளை வாங்குவீர்கள். குடும்பத்தில் பிரிந்து இருந்தவர்கள் இணையும் வாய்ப்பு உண்டாகும். இல்லத்தில் இருந்த பிரச்னைகள் அகலும். உற்றார் உறவினர்கள் உங்கள் காரியங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அந்த பாக்கியத்தைப் பெறும் காலகட்டமிது.  மாணவமணிகள் தினமும் நன்றாகப் படித்து தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். எளிமையான உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. பரிகாரம்: கோளறு பதிகம் படித்து சிவபெருமானையும் விநாயகர் அகவல் படித்து விநாயகரையும் வழிபடவும். 

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...