வியாழக்கிழமை 12 செப்டம்பர் 2019

விருச்சிகம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** விருச்சிகம் (SCORPIO) இது ஒரு பெண் ராசி. இதன் அதிபதி செவ்வாய். இது ஒரு நீர் ராசி; ஸ்திர ராசியும்கூட. தேள்தான் இந்த ராசியின் உருவம். இதனுடைய சின்னம் H. இது பிறப்பு உறுப்புகளைக் குறிக்கிறது. இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால் மிக்க சுறுசுறுப்பு உடையவராகவும், எதையும் நேருக்கு நேர் பேசும் குணம் கொண்டவராகவும் இருப்பர். எந்தத் தடங்கல் வந்தபோதும், எடுத்த காரியத்தை முடிக்கும் குணம் கொண்டவராக இருப்பர். இந்த ராசிக்கு 6-ம் ராசி மேஷம். அதனால், மேஷத்தில் உள்ள கிரகங்கள் உடல் நலத்தைக் கொடுக்கக்கூடும். செவ்வாயே 1-ம் வீட்டுக்கும் 6-ம் வீட்டுக்கும் அதிபதியாவதால், செவ்வாயே உடல் நலத்தைப் பாதிக்கக்கூடும்.

இன்று

செப்டம்பர் 12 

இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில்  வெற்றி வாய்ப்பு உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனகுழப்பம் உண்டாகலாம். 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
 

இந்த வாரம்

செப்டம்பர் 6 - செப்டம்பர் 12 (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய) பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களிடத்தில் சற்று எச்சரிக்கை தேவை. பயணத்தில் கவனம் தேவை. எடுத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். மன அமைதிக்கு யோகா, ப்ராணாயாமம் செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சற்று தொய்வு ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகளை நல்லபடியாக முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் பல யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வார்கள். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும். உழைப்புக்கேற்ற பலன்களைப் பெற நிறைய உழைக்க வேண்டி இருக்கும். 
அரசியல்வாதிகளின் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். மாற்றுக்கட்சிக் காரர்களும் உங்களை அரவணைத்துச் செல்வார்கள். கலைத்துறையினர் தங்கள் தொழிலில் அபிவிருத்திக் காண்பார்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். பக்குவமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள்.  மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். பெற்றோரின் ஆதரவு குறைந்திருக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடலாம். பரிகாரம்: ஹயக்ரீவரை தரிசனம் செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் சிறந்தது.  அனுகூலமான தினங்கள்: 8, 10.  சந்திராஷ்டமம்: இல்லை.

இந்த மாதம்

செப்டம்பர் மாத பலன்கள் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில்  குரு, தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு-  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
கோபமிருந்தாலும் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையுடைய விருச்சிக ராசிக்காரர்களே, இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.
 
தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைபடாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சற்று தாமதமாகக் கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் உடல்நலக் குறைவுகளையும் உண்டாக்கும். அரசியல்வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். முயற்சிகளில் எந்தவொரு தடையும் இல்லாமல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த தலைமைப் பதவிகளும் கிடைக்கும். புகழின் உச்சிக்கே செல்வீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். மக்களின் ஆதரவு பெருகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும். விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து பொருட்களை வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். உத்தியோலத்தில் இருப்பவ்ர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். அனுஷம்: இந்த மாதம் வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை உதிரிகளாக்குவீர்கள். புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும். கேட்டை: இந்த மாதம் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.  அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சனைகள் வரலாம்.

பரிகாரம்: ஸ்ரீ மகாதேவரை பூஜை செய்து வர காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23,
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

 

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்கள் சரியான இலக்கை நோக்கிச் செல்லும். அரசு வகையில் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த சலுகைகளைப் பெறுவீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். சமுதாயத்தில் உங்களது முக்கியத்துவம் கூடும். சோம்பலை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு சுறுசுறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் பரவி, உங்களுடன் நட்புகொள்ள அந்தஸ்திலுள்ளவர்கள் விரும்புவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தோருக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.  பெற்றோர்களின் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றமும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அவர்களின் வளர்ச்சிக்கு சமுதாயத்தில் அந்தஸ்தானவர்கள் உதவுவார்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வருமானம் சீராக இருப்பதால் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். சண்டைச் சச்சரவுகள் முடிவடையும். சிலர் வெளியூர் வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.  மணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். கூட்டுத்தொழிலில் லாபமும்  கூட்டாளிகளிடம் நேசமும் மற்றும் அவர்களின் அபிமானமும் உண்டாகும். பயணங்களால் லாபம் உண்டாகும். ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்களில் வெற்றி தேடி வரும். எவருடன் பழகுகிறீர்களோ அவர்களால் நற்பலன்கள் பெறுவீர்கள். அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். பெயரும் புகழும் உயரும். உடன்பிறந்தோர் மூலம் நலமுண்டாகும்.  செயற்கரிய சாதனைகள் செய்யவும் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறவும் வாய்ப்பும் யோகமும் உண்டாகும். எதிர்பாராத வகையில் புதிய சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய இடங்களுக்குச் சென்று  அங்கு சிறிதுகாலம் தங்கி வருமானம் உயரக் காண்பீர்கள். மறைமுகமாக பகைமை பாராட்டியவர்கள் பலமிழந்து உங்களுக்கு கைகொடுப்பார்கள். குழந்தைகளிடம் விட்டுக்கொடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். கடினமாக உழைத்து செயலாற்றுவீர்கள். உடல் உபாதைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். நிர்வாகத் திறன் கூடும். முயற்சிகளை நேர்வழியிலேயே செய்யவும். போட்டிபந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு அந்தஸ்தும் கௌரவமும் கூடும். சிலருக்கு அலுவலக பயிற்சிக்காக வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதுடன் மேலதிகாரிகளின் நம்பிக்கைகளுக்கும் பாத்திரமாவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகளில் சற்று கவனத்துடன் ஆலோசித்து ஈடுபடவும். கடன்கள் அடையத் தொடங்கும்.  விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து அதனால் நல்லெண்ணத்தைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்கு உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய கடன்கள் கிடைத்து விளைச்சலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள்.  அரசியல்வாதிகள் முயற்சிக்குத் தகுந்த பாராட்டுகளை கட்சி மேலிடத்திடம் இருந்து பெறுவீர்கள். தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மேன்மையடைவீர்கள். கட்சியில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். பயணங்களால் நன்மை உண்டாகும். வேலைகளைத் திட்டமிட்டுச் செய்வீர்கள். வெளியிலும் உங்கள் புகழ், செல்வாக்கு உயரும். மேலிடத்தின் கட்டளைகளை நிறைவேற்றி நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினர் புகழும் பெருமையும் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முயற்சியும் உழைப்பும் நன்மை பயக்கும். கைநழுவிப்போன வாய்ப்புகளும் மறுபடியும் உங்கள கைக்கே வந்து விடும்.  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியை பெற்று ஆன்ம பலத்தைக் கூட்டிக் கொள்ளுவீர்கள். எதையும் புரிந்து கொண்டு செயல்படவும். வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். உடன்பிறந்தோரிடமிருந்த மனக்கசப்புகள் மறைந்து சகஜ நிலைமை உருவாகும். மாணவமணிகளின் நினைவாற்றல் பெருகும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பரிகாரம்: ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டு வரவும். ***** தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2019  (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி தென்படும். சுபச்செலவுகளைச் செய்ய நேரிடும். உபரி வருமானம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.  பரஸ்பர நிதி திட்டங்களிலும் சேர்வீர்கள்.  வேலைகளைக் கச்சிதமாக முடிப்பீர்கள். குடும்பத்தினர் அனைவரின் அன்பும் ஆதரவும் நிரம்பக் கிடைக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தெளிவான மனதுடன் இருப்பீர்கள். செய்தொழிலை மேம்படுத்த அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சிலர் சொந்த வீட்டிற்குக் குடி பெயர்வீர்கள்.  போட்டி பந்தயங்களிலும் ஏஜென்ஸி, கமிஷன் போன்றவைகளிலும் ஆதாயம் கிடைக்கும். முரண்டுபிடித்த நண்பர்களை உங்கள் வழிக்கு கொண்டு வருவீர்கள். குழந்தைகளை விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ப்பீர்கள். உங்கள் உடலுழைப்பிற்கு இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். கடுமையாக உழைப்பீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளை நன்கு பரிசீலித்த பிறகே செயல்படுத்துவீர்கள்.   மேலும் திட்டமிட்டு படிப்படியாகச் செய்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் சில திட்டங்களைச் செய்வீர்கள். வம்பு வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான தீர்ப்புகள் வரும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களையும் அரவணைத்துச் செல்வீர்கள். மேலும் எதிர்பார்த்த அசையும் அசையா சொத்துகள் சேரும். உங்கள் பெயர், புகழ் உயரத்தொடங்கும். மற்றவர்களை உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். உங்களிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு உங்களின் தகுதிக்கு மீறி உதவி செய்து மகிழ்வீர்கள்.  உங்களை எதிர்ப்போரை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவீர்கள். சமுதாயத்தில் கௌரவமான பதவிகள் தேடிவரும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளை முதலீடு செய்யாமல் அறிவை மட்டுமே துணை கொண்டு செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்திலும் குதூகலம் நிறையும். உற்றார் உறவினர்களும் உங்கள் இல்லம் தேடி வரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். மேலதிகாரிகள் மனக்கசப்புகள் நீங்கி நட்புடன் நடந்துகொள்வார்கள். வேலைகளை திட்டமிட்டது போல் முடிப்பீர்கள். இந்த ஆண்டு முழுவதும் மனதில் காரணமின்றி ஒரு பயம் அவ்வப்போது வந்து போகும்.  வியாபாரிகளுக்கு அரசாங்கத்திலிருந்து சில அனுகூலங்கள் கிடைக்கும். எதிரிகள் அடங்கி நடப்பார்கள். வியாபாரத்தைச் சிறப்பாக நடந்தி முடிப்பீர்கள். வெளியிலிருந்து கடன்கள் வாங்கி வியாபாரத்தை பெருக்குவீர்கள். கூட்டாளிகள் சற்று பாராமுகமாக நடந்துகொள்வார்கள். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவும்.  விவசாயிகளுக்கு விளைச்சல் சிறிது மந்தமாக இருந்தாலும் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.  குத்தகைகளை நன்கு ஆலோசித்த பிறகே எடுக்கவும். பழைய குத்தகைபாக்கிகள் வசூலாகும். கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் உங்களைத் திருப்திப்படுத்தும்.  அரசியல்வாதிகள் இன்முகத்துடன் பேசி உங்கள் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் செயல்கள் அனைத்தும் தற்போது சாதனைகளாகும். முக்கிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். தகுதிக்குக் குறைவானவர்களிடம் சேர்க்கை வேண்டாம். பெண்மணிகள்குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். உற்றார் உறவினர்களை அரவணைத்துச் செல்லவும். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உடலும் மனமும் பலப்படும்.  ஆன்மிக நாட்டம் கூடும். ஆடை, ஆபரணங்களையும் வாங்கி மகிழ்வார்கள். பேச்சில் நிதானம் தேவை. மாணவமணிகள் விளையாட்டைக் குறைத்துக்கொள்ளவும். அவசரப்படாமல் சிறிது நிதானமாக நடந்துகொள்ளுங்கள். "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் படிப்பில் மட்டுமே முழு கவனத்தைச் செலுத்தவும். பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வணங்குவதோடு, குலதெய்வ வழிபாட்டையும் தவறாமல் செய்யவும்.  

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...