புதன்கிழமை 15 மே 2019

தனுசு

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** தனுசு (SAGITTARIUS) இது ஒரு நெருப்பு ராசி. உபய ராசி மற்றும் ஆண் ராசி. இதன் அதிபதி குரு. குருவானவர் தெய்வ அம்சம் உள்ளவராகக் கருதப்படுகிறார். “குரு பார்க்கக் கோடி புண்ணியம்” என்பார்கள். குரு எங்கிருந்தாலும், அல்லது எங்கு பார்த்தாலும் நன்மை விளையும் என்று சொல்வார்கள். இந்த ராசி மிகுந்த முன்னேற்றத்தை தருகின்ற ராசி. மனித சுதந்திரத்தை எதிர்பார்க்கின்ற ராசி. நல்ல சிந்தனைகளைக் கொடுக்கின்ற ராசி. பாதி மனிதன் வில், அம்புடன் பாதி குதிரை மேல் இருப்பது போன்ற உருவத்தைக் கொண்டுள்ள ராசி. இதனுடைய சின்னம் அம்பு. இதன் குறியீடு I. இடுப்பு, தொடைகள் மற்றும் கணையத்தைக் குறிப்பது இந்த ராசி. இது ஒரு இரட்டை ராசி. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இங்கிருந்தால், நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது. சனி, சுக்கிரன், புதன் ஆகியவை இங்கிருந்தால், எதிரியின் வீட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இன்று

மே 15

இன்று வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி  கிடைக்கலாம்.  சிலருக்கு கூடுதல் பொறுப்புகள்  வந்த சேரும். வருமானம் கூடும். குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.  
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

இந்த வாரம்

மே 10 - மே 16 (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) மதிப்பு மரியாதை கூடும், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.  உறவினர்களுக்கு உங்களாலான  உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகளால் மனக்கசப்புகள் நீங்கி கரிசனத்துடன் நடந்து கொள்வர். சக ஊழியர்கள் ஆதரவு கரம் நீட்டுவர். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். விவசாயிகள் அதிகம் உழைக்க வேண்டி வரும். உடல் நலமும் பாதிக்கப் படலாம். கொள்முதல் லாபம் சிறக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமாகச் செயல்படுங்கள். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப்போகும்.  பெண்மணிகள் குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். உங்கள் கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.  பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை அணிவித்து வழிபடவும்.  அனுகூலமான தினங்கள்: 12, 15. சந்திராஷ்டமம்:  10, 11.

இந்த மாதம்

மே மாத பலன்கள் (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) பிறர் மனதிற்கு தெம்பு தரும் வகையில் வார்த்தைகளை பேசும் தனுசு ராசியினரே  இந்த மாதம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படுத்தும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். செய்து கொண்டிருக்கும் வேலைகள் மிகச் சிறப்பாக நடந்து முடியும். 

அரசியல்வாதிகளுக்கு பணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக நடந்து முடியும். தனது பேச்சுத் திறமையால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மேலிடத்தில் மதிப்பு இருக்கும்.
பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். 

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலை களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.

மூலம்
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது.

பூராடம்
இந்த மாதம் கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்.

உத்திராடம்
இந்த மாதம் எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சனையை கண்டு பயப்படாமல் கையாள்வீர்கள். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். 

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31
பரிகாரம்: குருவுக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2019 (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)  இந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செயல்களில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் மிகவும் அணுகாமலும் அதேசமயம் அதிகம் விலகாமலும் இருப்பது நலம். செய்யும் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். பழைய தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  சிலருக்கு அபூர்வ சந்திப்புகள் நிகழும். தேவைக்கேற்ப செலவுகளைச் செய்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த பயணங்களைச் செய்வீர்கள். வழக்கு விஷயங்களில் விட்டுக்கொடுத்து சமரசமாகச் சென்று வெற்றி பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் உயரத் தொடங்கும். ஆலய திருப்பணிகளில் கலந்துகொள்வீர்கள். மனதில் நிம்மதி சூழக்காண்பீர்கள். சரியான நேரத்தில் உணவு உட்கொள்வீர்கள். குடும்பத்தினருடன்  புனித யாத்திரைகளைச் செய்வீர்கள். தந்தை வழியில் சுமுகமான பாகப்பிரிவினை ஏற்பட்டு சொத்துகள் கைவந்து சேரும்.  ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அளவு கடந்த தைரியத்துடன் எடுத்த காரியங்களை முடிப்பீர்கள். கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்கிற அடிப்படையில்  பிரச்னைகள் ஏற்பட்டு சாதகமான முடிவு கிடைக்கும். எப்படிப்பட்ட கடுமையான மனிதரையும் கவர்ச்சியான பேச்சினால் வசப்படுத்தி விடுவீர்கள். உடன்பிறந்தோர்களிடம் இருந்த பகைமை மாறி இனிமையாக நடந்துகொள்வீர்கள். மற்றவர்களை உற்சாகப்படுத்தி வேலைகளைச் சரியாக முடித்துக் கொள்வீர்கள்.  வீண் வம்பு வழக்குகளிடமிருந்து விலகி இருப்பீர்கள். அதாவது "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் உங்கள் காரியங்களை ஆற்றுவீர்கள். பலமுறை முயன்று தோற்றுவிட்ட விஷயங்களிலும் வெற்றி உண்டாகும். கடமைகளைச் சரியாகச் செய்து உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். புதிய வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். திட்டமிட்டுச் செலவுகள் செய்வீர்கள். சுய தேவைகளைக் குறைத்துக் கொள்ள மாட்டீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். உங்களின் தனித்திறமைகள் பிரகாசிக்க ஏதுவான சந்தர்ப்பங்கள் உண்டாகும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்குச் செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். அதே வழியிலும் உதவிகள் கிடைக்கும். பணவரவு நன்றாக இருப்பதால் சேமிப்பு உயரும். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். திட்டம் போட்டு சரியான லாபத்தை அள்ளுவீர்கள். வியாபாரத்திற்காக புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கும். பொருள்களுக்கு வரிச் சலுகையும் கிடைக்கும்.  விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய நிலங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். சிலர் குறுகிய காலப்பயிர்களை பயிர் செய்து இரட்டிப்பு லாபம் அடைவார்கள். பழைய கடன்களை அடைத்து நிம்மதியாக மூச்சு விடுவீர்கள். சந்தையில் உற்பத்திக்கேற்ற விலை நிர்ணயமும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்து உயரும். உங்கள் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும். சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவும் மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களது எண்ணங்கள் ஈடேறும். முக்கிய பயணங்களை இந்த ஆண்டு செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். பெயரும் மரியாதையும் சமூகத்தில் உயரும்.  பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் புதிய ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விரும்பிய பாடப்பிரிவுகளிலும் சேர்ந்து படிப்பீர்கள். நண்பர்களிடம் அனாவசிய விரோதம் வேண்டாம். பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது. ***** தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2019 (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய வாய்ப்புகள், புதிய பொறுப்புகள் கூடி வரும். பொருளாதாரம் சீராக இருக்கும். வாழ்க்கைக்கு பலமானதொரு அஸ்திவாரத்தை அமைத்துக்கொண்டு விடுவீர்கள். எண்ணிய எண்ணங்கள் திண்ணமாய் முடியும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.  நண்பர்களின் பயன் கருதாத உதவியினால் ஒரு படி மேலும் முன்னேற்றம் அடைவார்கள். சுய கௌரவத்தை விட்டு விடாமல் காரிய மாற்றுவீர்கள். செய்தொழிலில் புதிய மாற்றங்களையும் கொண்டு வருவீர்கள். கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெறாமல் தடைபட்டு வந்த சுபகாரியங்கள்சட்டென்று நடந்து முடிந்துவிடும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். புதியவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம்.  அசையாச் சொத்துகள் விஷயத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்கள் யாவும் ஒவ்வொன்றாகக் கூடி வரும். சொத்துகள் கைவந்து சேரும். வாகன வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். கௌரவம் மேன்மேலும் கூடும். எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிவிடுவீர்கள். உயர்ந்தோரின் நட்பு கிடைத்து அவர்களால் புதிய வாய்ப்புகளைச் செயல்படுத்த அனுமதியையும் பெறுவீர்கள்.  ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் தொழிலில் உங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வீர்கள். சகலமும் தெரிந்திருந்தும் ஒன்றும் தெரியாதவரைப் போல பாவனை செய்து ஒவ்வொன்றையும் தீர்க்கமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள். பொருளாதாரம் வளம் மேம்படும். அரசு துறைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுகம் கூடும்.  திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணமும் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறப்பும் உண்டாகும். சொல்லும் சொல் பயனுள்ளதாக இருக்கும். கொடுத்தவாக்கைக் காப்பாற்றுவீர்கள். புதிய தொழில்களையும் சுலபமாகதத் தொடங்கிவிடுவீர்கள். திட்டங்களை சர்வசாதாரணமாகச் செயல்படுத்தி விடுவீர்கள். நேர்முக மறைமுக எதிர்ப்புகளும் நீங்கிவிடும்.  பங்கு வர்த்தகத் துறையிலும் ஈடுபட்டு உபரி வருமானத்தைப் பெறுவீர்கள். புதிய மனிதர்களைச் சந்தித்து அதன்மூலம் ஒரு புதிய வாழ்க்கை பயணமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும். தேகத்தில் புதுப் பொலிவு உண்டாகும். உடல்நலம் மனவளம் மேம்பட யோகா பிராணாயாமம் கற்றுக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது. உத்தியோகஸ்தர்கள் இந்த விகாரி ஆண்டில் இடைவிடாமல் உழைக்க வேண்டியிருக்கும். அலைச்சலும் வேலையில் பளுவும் இருந்தாலும் திட்டமிட்டு அவைகளை முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளும் பெறுவீர்கள்.  வண்டி, வாகனம் வாங்க அலுவலகத்திலிருந்து கடன்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் நட்புடன் நடந்து கொள்வார்கள். பதவி உயர்வு கிடைக்கும். வருமானமும் படிப்படியாக வளரும்.  வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக முடியும். கூட்டாளிகள் நட்புடன் பழகுவார்கள். பழைய சேமிப்புகளை முதலீடு செய்து வியாபாரத்தைப் பெருக்க நினைப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் சற்று கடுமையாக இருக்கும். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். வங்கியில் கடன் வாங்கி புதிய பயிர்களையும் பயிரிடுவீர்கள். கொள் முதல் லாபம் அபாரமாக இருக்கும்.  அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். தொண்டர்களிடம் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்களைக் காண்பீர்கள். எதிரிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். கட்சி மேலிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். புதிய பொறுப்புகளையும் வழங்கும். ஊதிய உயர்வு மற்றும் பாராட்டையும் பெறுவீர்கள்.  கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வீர்கள். பெண்மணிகள் ஆடை அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் இருப்பதை எவரிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். மனதிற்கினிய பயணங்கள் செய்வீர்கள். மாணவமணிகள் கல்வி உயர்வுக்காகச் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிறிய முயற்சிகளிலும் பெரிய லாபம் கிடைக்கும்.  பரிகாரம்: ராமபக்த அனுமனை "ராம் ராம்' என்று ஜபித்தபடி சுற்றி வந்து வழிபடவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...