திங்கள்கிழமை 06 மே 2019

மீனம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). ***​ மீனம் (PISCES) (இது ராசி மண்டலத்தின் கடைசி ராசி; இது ஒரு பெண் ராசி. உபய ராசி. இரட்டை ராசி. இதன் உருவம் இரண்டு மீன்கள். இதன் சின்னம் L. இரண்டு மீன்கள் எதிர் எதிர் திசையில் பிணைத்திருப்பது போன்றது. உடல் உறுப்புகளில் கால்களைக் குறிக்கிறது. இங்கு சுக்கிரன் உச்சம் பெறுகிறார். புதன் நீச்சம் பெறுகிறார். இந்த ராசியானது சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோருக்கு நட்பு ராசி. இங்கு சூரியன் இருந்தால், ரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்கள் வரக்கூடும். ஏனெனில், சூரியன் 6-ம் வீட்டு அதிபதி அல்லவா? இங்கு சந்திரன் இருந்தால் சிலர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகக்கூடும். செவ்வாய், இருந்தால், கால்களில் எலும்பு முறிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். புதன் இருந்தால், நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும். குரு இருந்தால், கால்களில் வீக்கம், அடிவயிற்றில் கட்டிகள் போன்றவை ஏற்படக்கூடும். சனி முடக்குவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.

இன்று

மே 5

இன்று கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6


 

இந்த வாரம்

மே 3 - மே 9 (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய) செய்யும் செயல்களில் முன்னேற்றம் தென்படும். எதிரிகள் அடங்கிப்போவர். வெளியிடங்களிலிருந்து இனிய செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் நிறைவாக இருப்பதால் சேமிப்புகள் பல மடங்காகும். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, சிந்தனைகளுக்கும் செயல்வடிவம் கொடுக்க நினைப்பீர்கள். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். விற்பனை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்தவும்.  அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலனை அடைவார்கள். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைக்கும். பெண்மணிகளின் பொறுப்பற்ற பேச்சுகளால் குடும்பத்தில் சுமுகமான சூழல் பாதிக்கப்படும்.  மாணவமணிகள் கடுமையாக முயற்சித்தால் அதற்கேற்ற பலனைப் பார்க்கலாம். வெளிவிளையாட்டுகளில் அதிகமாக ஈடுபட வேண்டாம். பரிகாரம்: மகாவிஷ்ணுவையும் சனிபகவானையும் வணங்கி வரவும்.  அனுகூலமான தினங்கள்: 4, 8. சந்திராஷ்டமம்:  இல்லை.  

இந்த மாதம்

மே மாத பலன்கள்  மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றியடையப் போகும் மீன ராசியினரே நீங்கள் அவசரமாக எதையும் செய்யும் தயங்காத குணமும் உடையர்கள். இந்த மாதம் பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில்  சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக  பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிதொடர்புகளில் எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் இருந்த  போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க  பெறுவீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு அதிக ஆர்டர்கள் கைக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் பலவற்றில் கையெழுத்திடுவீர்கள். ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ற விஷயங்களைச் செய்து ரசிகர்களை கவர்வீர்கள்.

அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக யோசித்து செயல்பட்டால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். உங்கள் கட்சி பிரச்சனைகள் குடும்ப சந்தோஷத்தை கெடுக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அவ்வப்போது பாடத்தில் உள்ள சந்தேகங்களை போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

பூரட்டாதி
இந்த மாதம் ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகை கைக்கு கிடைக்கும். 

உத்திரட்டாதி
இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

ரேவதி
இந்த மாதம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். 

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் முருகனை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019  (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய) இந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். ஒதுக்கி வைத்திருந்த காரியங்களையும் செய்யத் தொடங்குவீர்கள்.  செய்தொழிலில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். புதிய வீடு வாங்கி நூதன கிரகப்பிரவேசம் செய்வீர்கள். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகும். உங்களுடைய தெளிவான எண்ணங்களால் குடும்பத்தில் மதிப்பு மரியாதை உயரும். பெரியோர்களின் தொடர்பு உண்டாகி வாழ்க்கைத் தரம் உயரும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடலுபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள்.  குழந்தைகளுடன் உங்கள் காலநேரங்களை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். சிலர்  வெளிநாட்டுக்கு பயணிப்பீர்கள். நெடுநாளாக தள்ளிப்போய்க்கொண்டிருந்த திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும். உபரி வருமானம் நிரந்தர வருமானமாக மாறும். ஆழ் மனத்தியானம் போன்ற மறைமுகக் கலைகளைக் கற்று, மற்றவர்களுக்கும் கற்றுத் தருவீர்கள்.  ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பணவரவு திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும் பதவியும் உங்களை பலப்படுத்தும். மதிப்பு மரியாதை உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். நெருங்கியவர்களுக்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெற்று உங்கள் கௌரவத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.  புதிய கடன்களும் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீர்யமும் பெற்று செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே தொடரும். வழக்குகள் சாதகமாகவே முடியும். மனதில் காரணமில்லாமல் குடிகொண்டிருந்த குழப்பங்களும் மறையும். இரண்டுபட்டிருந்த குடும்பம் ஒன்று சேரும். குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து பாகப்பிரிவினை சுமுகமாக முடியும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்போடு நடந்து கொள்வார்கள். சிலர் வேலை மாற்றம் செய்வார்கள். அதனால் ஊதிய உயர்வினைப் பெறுவார்கள். இந்த ஆண்டு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைத்து உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். அலுவலகத்தில் வண்டி, வீடு வாங்குவதற்கான விண்ணப்பங்கள் சாதகமாக பைசலாகும். சக ஊழியர்கள் உங்கள் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.  வியாபாரிகள் வியாபாரத்திலிருந்த மந்தநிலை மாறி லாபங்கள் வரும். புதிய முதலீடுகளில் ஈடுபட நேரிடும். போட்டி, பொறாமைகள் குறையும். விவசாயிகள் மகசூல் வருமானம் படிப்படியாக உயரும். நீர்ப்பாசன வசதிகளுக்காக நீங்கள் செய்யும் செலவுகள் பலனளிக்கத் தொடங்கும். கையிருப்புப் பொருள்கள்மீது அக்கறை அதிகரிக்கும். நிலத்தின்மீது போதிய கவனம் செலுத்தவும். மண்ணின் வளம் குன்றாமலிருக்க இயற்கை உரங்களை பயன்படுத்தவும். கால்நடைகள் மூலம் வருமானத்தைக் கூட்டிக் கொள்வீர்கள்.  அரசியல்வாதிகள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஆண்டாக அமைகிறது. தொண்டர்களின் அலட்சியப் போக்கு உங்களை திருப்திப் படுத்தும். உங்கள் சொல்லுக்கு கட்சி மேலிடம் செவி சாய்க்கும். மக்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினரின் அவநம்பிக்கைகள் அகலும். நற்பெயர் எடுக்க முனைவார்கள். நழுவிச் சென்ற வாய்ப்புகள் தேடிவரும். துறையில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். பெண்மணிகள் குடும்ப நலம் சீரடையும். பெற்றோர்களின் ஆதரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மாணவமணிகளின் சிறிய முயற்சிகளும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். ***** தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2019 (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பாராத வகையில் பண உதவி கிடைக்கும். செய்தொழிலில் நல்ல முறையில் முன்னேற்றமடையும். வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நீண்ட காலம் புத்திரப் பேறு இல்லாது இருந்தவர்களுக்கு புத்திர ப்ராப்தி உண்டாகும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விடும். இனம்புரியாத மனக்குழப்பம், பயம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே முடியும். அந்தஸ்திலுள்ளவர்களின் நட்பு கிடைத்து அதனால் நன்மைகள் ஏற்படும்.  நீண்ட நாள்களாகத் தடைப்பட்டிருந்த திருமணம் கைகூடும் வாய்ப்புண்டாகும். சிலருக்கு கடல்கடந்து அயல்நாட்டுக்குச் சென்று வரக்கூடிய பாக்கியம் ஏற்படும். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்வார்கள். அதிர்ஷ்ட முதலீடுகளைச் செய்வீர்கள். அரசு வழியில் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர்களுக்கு உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதோ, முன்ஜாமீன் போடுவதோ கூடாது.  ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் சொல்வாக்கு செல்வாக்கு இரண்டும் சிறப்பாக அமையும்,. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பழைய சொத்துகள் உயர்வான விலைக்கு விற்று புதிய  அசையா சொத்துகளை வாங்குவீர்கள்.  மாறுபட்ட கருத்துடையவர்களை உங்களின் பேச்சாற்றலால் வசப்படுத்திக் கொள்வீர்கள். எவருக்காகவும் தனிப்பட்ட கொள்கைகளை விட்டுவிட மாட்டீர்கள். குழந்தைகள் முன்னேற்றப் பாதையில் செல்ல ஊக்கப்படுத்துவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களை நாடி அவர்களின் அறிவுரைகளைக் கேட்பீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்.  வருமானம் பலவழிகளிலும் கைவந்து சேரும். பங்குவர்த்தகத்தின் மூலமும் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை ஜாம் ஜாம் என்று நடத்துவீர்கள். தோற்றத்தில் மிடுக்கு உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும். உங்கள் புத்திசாலித்தனம் கூடும். தன்னம்பிக்கையுடன் உங்கள் காரியங்களைச் செய்வீர்கள். உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். தீயோர்களின் சேர்க்கையை தவிர்த்து விடவேண்டிய காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு இந்த விகாரி புத்தாண்டில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய வேலைகளை கச்சிதமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் பிரச்னையின்றி நிறைவேறும். தெளிவான மனதுடன் பணியாற்றுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களை விருப்பமில்லாமல் செய்ய வேண்டி வரும். வியாபாரிகள் புதிய முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தைப் பெருக்குவார்கள். பழைய கடன்களையும் அடைத்து விடுவீர்கள்.  கூட்டாளிகளிடம் வெளிப்படையாகப் பழக வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். விளைச்சலில் பூச்சி பாதிப்பை கட்டுப்படுத்தவும். விவசாய உபகரணங்களை வாங்கி முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.  அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்து விடுவார்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் நண்பர்களாக மாறி விடுவார்கள். திட்டமிட்ட பணிகள் யாவும் குறித்த இலக்குகளை அடையும். நெடுநாளைய லட்சியம் பூர்த்தியாகும். கலைத்துறையினர் தற்போது ஏற்ற இறக்கங்களை காண்பார்கள். வருமானத்திற்கு குறைவு இருக்காது. சக கலைஞர்களின் உதவி உங்களை உற்சாகப்படுத்தும்.  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். இந்த காலகட்டத்தில் மனதில் காரணமில்லாமல் அமைதி குறையும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. தேக ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து விலகி இருக்கவும். நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.  பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு தீபமேற்றி வழிபடுங்கள்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...