21 ஜூலை 2019

துலாம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** துலாம் (LIBRA) இது ஒரு ஆண் ராசி. சர ராசி - காற்று ராசியும்கூட. இதன் அதிபதி சுக்கிரன். இதற்கு தராசு உருவத்தைக் கொடுத்தாலும், இதன் சின்னம் G. இது முதுகின் பின்பகுதி மற்றும் அதன் கீழ்ப்பகுதி (புட்டம்), சிறுநீரகம் ஆகியவற்றைக் குறிக்கிறது. சனி இந்த ராசியில்தான் உச்சமடைகிறார். சுக்கிரனுக்கு மூலத் திரிகோண வீடு. சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை இந்த ராசியில் இருந்தால், அவர்கள் எதிரியின் வீட்டில் இருப்பதாகக் கருதப்படும். இந்த ராசியில் பிறந்தவர்கள், தன் கணவன் / மனைவி மேல் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்கு சுக்கிரன் அதிபதியாவதால், இவர்களுக்கு எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் சுபாவம் இருக்கும். எந்தப் பிரச்னையையும் சமாதானமாகப் பேசித் தீர்த்துக்கொள்வதில் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் லக்கினாதிபதியாக இருப்பதைப்போல், எட்டாம் வீட்டுக்கும் அதிபதியாகிறார். ஆகவே, இவர்களுடைய பிரச்னைகளுக்கு இவர்களே பொறுப்பு.

இன்று

ஜூலை 21

இன்று வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். சிலருக்கு சிறப்பான குழந்தைப் பாக்கியமும் கிட்டும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

இந்த வாரம்

ஜூலை 19 - ஜூலை 25 (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) பணவரவிற்குக் குறைவு இராது. முயற்சிகள் வெற்றியை தேடித் தரும். உறவினர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். மூத்த உடன் பிறப்புகள் உதவி செய்யும் நிலை இல்லாததால் அவர்களை எதிர்பார்க்க வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி  உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் நட்போடு பழகுவார்கள். அலுவலக வேலைகளில் போதிய கவனம் செலுத்தவும்.  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சரளமான நிலைமை உருவாகும். கூட்டுத் தொழிலில் ஒற்றுமை ஓங்கும்.  விவசாயிகளுக்கு இதனால் நல்ல லாபத்தை அள்ளுவீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.  அரசியல்வாதிகளின் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிட்டும்.  பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவமணிகளுக்கு அறிவியல் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களுடன் தங்கள் நேரங்களை சந்தோஷமாகக் கழிப்பர்.  பரிகாரம்: நவக்கிரக வழிபாடும்; தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடும் செய்வது நலம்.  அனுகூலமான தினங்கள்: 19, 23.  சந்திராஷ்டமம்:  இல்லை.

இந்த மாதம்

ஜூலை மாத பலன்கள் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)


கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ),  சுக்ரன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.. சின்ன சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு  செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அணுசரிப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள்  உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும். வீட்டிற்கு  தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷ யங்களில் கூட கவனமாக செய்வீர்கள். கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். வீண்  கவலை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.  அரசியல் துறையினருக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. உழைப்புக்கு  முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபவர்கள் அதிக பயன் பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது.  மனதில் உற்சாகம் உண்டாகும்.

சித்திரை:
இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது  மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல்  ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும்.  வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.

ஸ்வாதி:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது.  இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும்  எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும்.

விசாகம்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும்.  மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம்.

பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19
 

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை விரிவுபடுத்த புதிய வியூகத்தை செயல்படுத்துவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அவர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தயங்காமல் முடிவு எடுக்கும் திறமையினால் முன்னேற்றத்திற்கான வாசற் கதவைத் திறப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் செய்யும்போது விதிவிலக்குகளைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.  ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். உற்றார் உறவினர்கள் தேடி வந்து ஆதரவு கொடுப்பார்கள். பிரச்னை ஏற்படக்கூடிய விவாதங்களில் உங்கள் கருத்தைக் கூறாமல் "கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்' என்பதுபோல் நழுவி விடுவீர்கள். திடமாகச் சிந்தித்து செயல்படுத்துகின்ற காரியங்களில் முன்வைத்த காலைப் பின் வைக்காமல் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். நீண்டகாலமாக நிலுவையிலிருந்த வழக்கு விவகாரங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். பெற்றோர் வழியில் இருந்த பிணக்குகள் மறைந்து சகஜ நிலை உண்டாகும். வரவேண்டிய பணம் எவ்வகையிலாவது உங்கள் கை வந்து சேர்ந்து விடும். நீண்டகால எண்ணம் ஒன்று இந்த காலகட்டத்தில் ஈடேறக் காண்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருவீர்கள். ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போலாகும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பூர்வீகச் சொத்துகள் உங்கள் கையை வந்தடைந்து அதிலிருந்து வருமானமும் வரத்தொடங்கும். தர்ம காரியங்களுக்கும் சிறிது செலவு செய்வீர்கள். எதிர்வரும் ஆபத்துகளை உங்கள் உள்ளுணர்வால் புரிந்து கொண்டு அவைகளின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.  நஷ்டத்தில் நடந்து வந்த தொழிலை புதுப்பித்து லாபத்துடன் இயக்குவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு நடப்பார்கள். வெளிவட்டாரத்திலிருந்து நல்ல செய்தியைக் கேட்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். உங்கள் பகைவர்களுக்கு தோல்வி உண்டாகும். உங்களுக்கு எதிராகப் பின்னப்பட்ட சதிவலையிலிருந்து மீண்டு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மற்றபடி சுயமுயற்சி செய்து உயர்ந்த நிலைக்கு வந்துவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இந்த ஆண்டு குறைவாகக் கிடைக்கும். கொடுத்த வேலைகளை குறித்த காலத்திற்குள் முடிக்க முயற்சி செய்யவும். உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தையும் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் பொறுமையும் நிதானமும் அவசியம். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். எவரிடமும் அனாவசிய வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிறிய தடைகளுக்குப்பிறகு வீடு கட்ட கடன்கள் கிடைக்கும்.  வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அனுகூலமான சூழ்நிலைக் காணப்படும். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் வருமானம் சீராக இருந்தாலும் தொழிலை பெரிய அளவுக்கு விரிவுபடுத்த முடியாத அளவுக்கு இருக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய குத்தகைகளின் மூலம் லாபம் பெறுவீர்கள். புதிய வாழ்க்கை வசதிகளும் பெருகும். விவசாயப் பணியாளர்களை அரவணைத்துச் செல்லவும்.  அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையோடு நடந்து கொள்ளும். புதிய பொறுப்புகளையும் வழங்கும். பொதுச்சேவையில் புதிய திருப்பங்கள் உண்டாகும். தொண்டர்களை அனுசரித்துச் சென்று அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளவும். அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் அதிகரிக்கும். பணவரவுக்கும் குறைவு வராது. சில ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள்.  பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நல்ல மதிப்பு கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரிடம் கிடைக்கும் ஆதரவு உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானைவழிபடவும். ***** தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2019 (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பலவகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். உங்கள் காரியங்களை ஆரவாரம் இன்றி அடக்கமாகச் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். விழிப்புடன் இருந்து சேமிப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். அனைவருடனும் பாகுபாடு பார்க்காமல் நடந்துகொள்வீர்கள்.  இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். இல்லத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். எவருடன் நீங்கள் பழகுகிறீர்களோ அவர்களால் நற்பலன்களைப் பெறுவீர்கள். எடுத்த காரியங்களை சுலபமாக முடித்து வெற்றி பெற்று விடுவீர்கள். அரசாங்க சலுகைகளைச் சுலபமாக அடைந்து விடுவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தானாவே நீங்கி விடும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விற்க முடியாமல் இருந்த சொத்துகள் நல்ல விலைக்கு விற்பனையாகும். உடல்ஆரோக்கியம் சீராக இருக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள்.  ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் மனதில் இருந்த வீண் சஞ்சலங்களும் குழப்பங்களும் மறையும். எப்படி நடக்குமோ என்று எண்ணியிருந்த காரியங்கள் எந்த வித தடங்களுமின்றி சுலபமாக நடந்தேறும். சமூகத்தில் உயர்ந்தவர்களோடு நல்லுறவு ஏற்படும். மூத்த உடன்பிறந்தோர் உறுதுணையாக இருப்பார்கள்.  மறைமுகமாக உங்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்த எதிரிகளை இனம் கண்டு விலக்கி விடுவீர்கள். உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்று நிறைவேறும். ஏழை எளியவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள். சிலருக்கு புதிய நிலம் வீடு வாங்கும் யோகமும் உண்டாகும். நுணுக்கமான அறிவால் சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.  ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையையும் நிறைவேற்றுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைத் தடையில்லாமல்  முடித்து விடுவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு இரட்டிப்பாகக் கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்களாலும் பணவரவு உண்டாகும்.  சக ஊழியர்களின் உதவியுடன் வேலைப் பளுவைக் குறைத்துக் கொள்வீர்கள். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். பகைமை பாராட்டும் சக ஊழியர்களிடம் மனம்விட்டு பேசி இணக்கமாகி விடுவீர்கள்.  வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகள் பெற்றி பெற்றாலும் கொடுக்கல் வாங்கல்களில் சம நிலையையே காண்பீர்கள்.  கடன்களை உடனுக்கு வசூலிப்பது நல்லது. வியாபார யுக்திகளைச் செயல்படுத்தும்போது ஏற்படும் இடையூறுகளை பொறுமையுடன் சமாளிக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். தேவையான விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். விவசாயத்தில் புதிய யுக்திகளையும் முறைகளையும் புகுத்துவீர்கள். ஊடுபயிர்களையும் பயிரிட்டு லாபம் காண்பீர்கள்.  அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் சற்று பாராமுகமாக நடந்து கொள்வார்கள். கோபப்படாமல் விட்டுக்கொடுத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான விஷயங்களில் மட்டுமே ஈடுபடுவார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த பெயர், புகழ் பெறுவார்கள். பொறுமையுடன் செயல்பட்டு பிரச்னைகளைத் தகர்ப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ரசிகர்களின் ஆதரவைப் பெற்று செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.  அனைவரிடமும் நியாயமாக நடந்துகொள்ளவும். எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவார்கள். பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவார்கள். கோரிக்கைகள் அனைத்தும் நல்லபடியாகவே நடந்தேறும். சில இடையூறுகள் தோன்றினாலும் குறிக்கோளை நோக்கி தைரியத்துடன் முன்னேறுங்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள். பரிகாரம்: "மகாதேவ மகாதேவ; என்று ஜபித்து ஈஸ்வரனை தரிசித்தால் சிறப்புகள் கூடும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...