புதன்கிழமை 04 செப்டம்பர் 2019

சிம்மம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** சிம்மம் (LEO) இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசியும் கூட. மேஷத்தைப்போல இதுவும் ஒரு நெருப்பு ராசி. இதன் அதிபதி சூரியன். இது சூரியனின் மூலத்திருகோண வீடு. சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. சூரியனின் கடக ராசிப் பிரவேசம் தட்சணாயணம் என்றும், மகர ராசிப் பிரவேசம் உத்தராயணம் என்றும் கூறப்படுகிறது. இந்த ராசிக்கு சிம்ம உருவத்தைக் கொடுத்தாலும், இந்த ராசி மனித இதயத்தின் இரண்டு வால்வுகளின் அமைப்பையே கொண்டிருக்கிறது. இது E என்று குறிக்கப்படுகிறது. மனித இதயம், பின் முதுகு, முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றை இந்த ராசி குறிக்கிறது.

இன்று

செப்டம்பர் 4 

இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது.  இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

இந்த வாரம்

ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 5 (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) உங்கள் முயற்சிகள் யாவும் நிறைவேறும் காலகட்டமிது. குடும்பத்தில் உற்சாகம் தாண்டவமாடும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். உடன்பிறந்தோர் வழியில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மதிப்பு மரியாதை உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களை கூற வேண்டாம். வியாபாரிகளுக்கு மனதில் குழப்பங்கள் சூழும். அவசியமான செலவுகளுக்குக் கடன் வாங்க நேரிடும். விவசாயிகள் அரசிடமிருந்து சில சலுகைகளைப் பெறுவார்கள். புதிய குத்தகைகளைத் தவிர்க்கவும்.
 
அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் நட்பைப் பெறுவார்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமாகவே முடியும். கலைத்துறையினர் திறமைக்கு ஏற்ற வரவேற்புகளைப் பெறுவார்கள். பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சற்று சிரமம் ஏற்படும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். மாணவமணிகளுக்கு விளையாட்டுகளில் கவனமாக ஈடுபட வேண்டும். பெற்றோரிடம் அனுசரித்துச் செல்லவும்.

பரிகாரம்: அம்பாளையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்:  2, 3.

சந்திராஷ்டமம்: இல்லை.  

இந்த மாதம்

செப்டம்பர் மாத பலன்கள்  (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் -  சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:
குழந்தை மனம் உடைய சிம்மராசியினரே, இந்த மாதம் சில எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும். ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.    

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில்  சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு தொழில்ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. வரவேண்டிய பணப்பாக்கிகள் மட்டும் இழுபறி நிலையிலேயே இருந்து வரும். இடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரைத் தவிர்த்துவிடுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.  மாணவர்கள் எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு படிப்பது நல்லது. மகம்: இந்த மாதம் எதிர்பாராத செலவினங்கள் இருந்தாலும் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் வாதங்களைத் தவிர்க்கவும். பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.  பூரம்: இந்த மாதம் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அதே போல் உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். புதிய நபர்கள் நட்பு உண்டாகும்.  உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. 

பரிகாரம்: சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து பூஜித்து வாருங்கள் பிரச்சினைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16,
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில்  செய்தொழிலில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்கங்கள் மறைந்து சீராக வருமானம் வரத்தொடங்கும். அலைச்சல்கள் குறையும்.  மறைமுகமாக சங்கடங்கள் கொடுத்துக் கொண்டிருந்த நண்பர்கள் இணக்கமாகப் பழகத் தொடங்குவார்கள்.  இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உபரி வருமானங்களும் அவ்வப்போது கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். நீண்ட நாளைய குலதெய்வப் பிரார்த்தனை ஒன்றை செயல் படுத்துவீர்கள். மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்னைகள் தானாகவே தீர்ந்துவிடும். உங்களின் அனுபவ அறிவு தக்க சமயத்தில் கைகொடுக்கும். பேச்சினால் தொழில் செய்பவர்கள் சிறப்பான ஏற்றங்களைக் காண்பார்கள். தாய் நலன் கூடும்.  உடல் உழைப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். பொதுச்சேவையில் ஈடுபடுவீர்கள். எதிரிகளை அவர்கள் போக்கிலேயே சென்று உங்கள் வசப்படுத்திக் கொண்டு விடுவீர்கள். உற்றார் உறவினர்களும் நன்மைகளை அடைவார்கள். திடீரென்று சம்பந்தமில்லாதவர்கள் வந்து உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். பெரிய கடன்களையும் முழுமையாக அடைத்து விடுவீர்கள். தேக ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்வீர்கள். ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். நவீன வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். உங்கள் புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை இரண்டும் கூடும். மேலும் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிட நேரிடும். தீயோரின் சேர்க்கையை தவிர்த்துவிடவும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகளை நண்பர்களைக் கலந்தாலோசித்த பின்பே செயல்படுத்தவும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்தடையும். வருமானத்தில் இருந்த சிரமங்கள் குறையும். தடைப்பட்டிருந்த காரியங்கள் தாமதமின்றி எளிதாக நிறைவேறும். மனவருத்தங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். விலகி இருந்த உறவினர்கள் தேடி வருவார்கள்.  செய்தொழிலில் பலவித புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். அரசாங்கத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலருக்கு திடீர் திருமண யோகம் உண்டாகும். சிலர் இருக்கும் வீட்டை விற்று விட்டு புதிய வீடு வாங்கிச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். வாக்கு கொடுக்கும்போது கவனமாக இருக்கவும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்க சிறிது தாமதமாகும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் சமரசமாகச் செல்வதே நலம் பயக்கும். எவரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். சக ஊழியர்களிடம் நட்போடு பழகுவீர்கள். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும். மனதில் ஓர் அனாவசியப் பதட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். வியாபாரிகள் கடுமையாக உழைத்து வருவாய் ஈட்டி முக்கிய பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள். மேலும் சில சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடலாம்.  கூட்டாளிகளிடம் சற்று கவனமாகப் பழகவும். அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று புதிய கடன்கள் வாங்கி வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தவும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடைகளாலும் நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கு வழக்குகளால் மன உளைச்சல் ஏற்படும். இருப்பினும் முடிவு சாதகமாகவே இருக்கும்.  அரசியல்வாதிகள் எந்த வேலையையும் நன்றாகத் திறம்படச் செயல்படுத்துவீர்கள். தொண்டர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எதிராக தீட்டப்பட்ட சதிகள் உங்களை பாதிக்காது. புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். பெயரும் புகழும் உயரும். பணவரவு எதிர்பார்த்ததுபோல் இல்லாவிட்டாலும் தேவைகள் பூர்த்தியாகும். பெண்மணிகள் மன நிம்மதியைப் பெறுவார்கள். தர்ம காரியங்களிலும் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் அனைவரையும் அவர்கள் போக்கிலேயே விட்டுக்கொடுத்து இணக்கமாக்கிக் கொள்ளுங்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளலாம். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பரிகாரம்: பெருமாள்- தாயாரை வழிபடவும். ***** தமிழ் புத்தாண்டு பலன்கள் - 2019 (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் செய்தொழிலில் துரித முன்னேற்றங்களைக் காண்பீர்கள். ஒரு புதிய வித்தியாசமான போக்கில் காலடி எடுத்து வைப்பீர்கள். குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அதுபோல் புதிய வாய்ப்புகள் தேடிவரும்.  ஏற்றத்தாழ்வுடன் கூடிய வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் இப்பொழுது முதல் தாழ்வின்றி படிப்படியான உயர்வடைவார்கள். சமூகத்தில் உயர்ந்தோரின் ஆதரவும், அரசாங்க செல்வாக்கும் உங்களை அமோகமாகக் கைதூக்கி விடும். தெய்வ வழிபாட்டினால் கைமேல் பலன் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். வருமானம் படிப்படியாக உயரும்.  உடலாரோக்கியமும் நல்ல முறையில் இருக்கும். வெளிநாடு செல்ல விசா எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அத்தகைய விசா கிடைத்து விடும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். புதிய நவீன சொகுசான வாகனம் வாங்குவீர்கள். நிர்வாகத் திறன்  கூடும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.  ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களுடன் இணக்கமானச் செயல் படுவீர்கள். அவர்களால் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். தனித்து தொழில் செய்தவர்கள் புதிய நண்பர்களுடன் சேர்ந்து செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலர் தெய்வ  பிராத்தனைகளை முன்னிட்டு அதிக செலவு செய்து நிம்மதியடைவார்கள். மற்றும் நீண்டதூர தல யாத்திரை சென்று வரவும் யோகமுண்டு. தானங்கள் வழங்கியும் மகிழ்ச்சியடைவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுவீர்கள். எவருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பது, முன்ஜாமீன் போடுவது கூடாது. எவ்வளவு வெற்றி அடைந்தாலும் தற்பெருமை பேசக் கூடாது. கடினமான உழைப்புக்கேற்ற இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.  தேவையான நேரத்தில் தக்க சலுகைகள் தேடிவரும். பொதுமக்கள் தொடர்புள்ள வேலைகளில் அதிக ஈடுபாடு உண்டாகும். தங்களுக்குக்கீழ் பணியாற்றுபவர்களால் எந்த தொல்லையும் ஏற்படாது. இல்லத்தில் திருமணம், குழந்தைப்பேறு உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் இந்த தமிழ்வருடப் பிறப்பான விகாரியில் மேலதிகாரிகளால் நன்மதிப்பைப் பெறுவார்கள். கடின உழைப்பை உங்களின் தாரகமந்திரமாக கொண்டு உழைக்கவும். சக ஊழியர்களிடம் நல்லமுறையில் பேசிப்பழகவும். அலுவலக ரீதியான பயணங்களில் நல்ல அனுகூலங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் நன்றாக இருக்கும். நீண்ட நாள் பாக்கிகளும் வசூலாகிவிடும். கொடுக்கல் வாங்கல்களில் முன்னேற்றமான திருப்பங்கள் காண்பீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். அவர்களிடம் எந்த ரகசியத்தையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அந்நியர்களை நம்பி புதிய கடன்களை கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். கை நழுவிப்போன குத்தகை திரும்பக் கிடைக்கும். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும்.  அரசியல்வாதிகளுக்கு  இடையிடையே சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். மனதில் புதிய  நம்பிக்கை உண்டாகும்.  உங்கள் பொறுப்புகளை கவனத்துடன் செய்வீர்கள். மக்கள் சேவையில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் பெறுவர். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.  பெண்மணிகள் இந்த காலகட்டத்தில்  காரணமில்லாமல் மனதில் சிறிது அமைதி குறையும். பெரியோர்கள் ஆதரவுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பார்கள். பிள்ளைகளாலும் பெருமை அடைவீர்கள். பணவரவும் இந்தக் காலக்கட்டத்தில் சீராக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.  மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களையே பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவுடன் தேவைகள் பூர்த்தியாகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்த்து அனைவரிடமும் நட்புடன் பழகுவது நல்லது. பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் குலதெய்வ வழிபாடு செய்வதும் நலம் பயக்கும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...