திங்கள்கிழமை 06 மே 2019

மிதுனம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** மிதுனம் (GEMINI) இது ஒரு ஆண் ராசி. காற்று ராசியும்கூட. இது ஒரு உபய ராசியும் ஆகும். இது இரட்டை ராசியாதலால், இரண்டு கோடுகளால் குறிப்பார்கள். இரண்டு கோடுகள் போட்டு அதை இணைத்தால் இந்த ராசியின் உருவம் கிடக்கும். C-தான் இந்த ராசியின் குறியீடு. இந்த ராசிக்கு அதிபதி புதன். அதுவும் ஒரு இரட்டை கிரகம். இரண்டு மனைவி, இரண்டுவிதமான வருமானங்கள், இரட்டைக் குழந்தைகள் ஆகியவற்றைக் குறிப்பது இந்த ராசியும், புதன் கிரகமும்தான். இந்த ராசியும், புதன் கிரகமும் புத்திசாலித்தனத்தையும், புத்திக்கூர்மையையும் குறிப்பவை. பொதுவாகவே, காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் புத்திசாலித்தனத்தைக் குறிப்பவை. புதன் கிரகம் ஒரு நிலையில்லா தன்மை கொண்டது. இது சூரியனுக்கு முன்னும் பின்னும் நிலையில்லாமல் சென்றுகொண்டிருக்கும். ஆகவே, இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் ஒரு நிலையில்லா சுபாவம் கொண்டவர்கள். எதிலும் ஸ்திரமான பிடிப்பு இல்லாதவர்கள். உடல் உறுப்புகளில் கைகள், தோள்பட்டை, நுரையீரல் ஆகியவற்றைக் குறிப்பது இந்த ராசி.

இன்று

மே 6

இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில்  செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5
 

இந்த வாரம்

மே 3 - மே 9 (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். ஆடை ஆபரணங்கள் சேரும். உடன்பிறந்தோர் வழியில் சோதனைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவர். பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வந்து சேரும். சாதுர்யத்துடன் செயல்பட்டு நல்ல லாபத்தையும் அள்ளுவார்கள்.  விவசாயிகளுக்கு திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். நீர்ப்பாசன மேம்பாட்டுக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் அரிய சாதனைகளைச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பெண்மணிகளுக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும். விளையாட்டில் புதிய யுக்திகளைச் செயல்படுத்த வேண்டாம். பரிகாரம்: "நமசிவாய' என்று தினமும் 108 முறை ஜபித்து வழிபடவும்.  அனுகூலமான தினங்கள்: 3, 5.  சந்திராஷ்டமம்: இல்லை.

இந்த மாதம்

மே மாத பலன்கள்  (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) எடுத்த காரியத்தை முடிப்பதற்காக ஒரு முறைக்கு பல முறை முயற்சி செய்யும் மிதுன ராசியினரே இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். ஆரோக்கியம் சம்பந்தமான வீண் மனக்கவலை  உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.  அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். திடீர் பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம்  போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு வேலைகள் கிடைப்பதுபோல் இருந்து பின் நழுவிச் செல்லும் சூழல் உருவாகும். கவலை வேண்டாம். உங்கள் அயராத முயற்சியால் வெற்றி காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சில விஷயங்களை அமைதியாக இருப்பதன் மூலம் சாதித்துக் கொள்வீர்கள்.
பெண்களுக்கு மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்.

மிருகசீரிஷம்
இந்த மாதம் ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க  முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.

திருவாதிரை
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

புனர்பூசம்
இந்த மாதம் குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும்.  கணவன் மனைவிக்கிடையே  இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18
பரிகாரம்: பெருமாளை துளசியால்  அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2019 (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எந்த காரியத்தையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து நல்ல விஷயமாக இருந்தால் மட்டுமே ஈடுபடுவீர்கள். மனதில் நிம்மதி உண்டாகும். புத்திசாலித்தனம் கூடும். தொடர்ந்து வந்த மனக்கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள்.   புதிய ஊர்களுக்குச் சென்று செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருந்தவர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். புதிய கடன்களும்  கிடைக்கும். இதனால் புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகளிலும் ஈடுபடுவீர்கள். உங்களின் முன்னேற்றத்திற்கு பெரியோர்கள் உதவிகரமாக இருப்பார்கள். செய்தொழிலில் முன்னேற்றம் அடைய விடாமல் இருந்த இடைத் தரகர்கள் விலகி நேரடியாகப் பொருள்களை விற்பனை செய்வீர்கள்.  நண்பர்களும் கூட்டாளிகளும் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தைகளை மேற்படிப்புக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்கள். ஆன்மிகத்திலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். மேலும் உங்களின் சூட்சும புத்தியும் விவேகமும் செயல்களில் வெளிப்படும். இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் வருமானத்தில் இருந்த சிரமம் குறையும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். தடைகளையும் இடையூறுகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சுயநலமில்லாமல் பொது நலமாக வலம் வருவீர்கள். உங்கள் பேச்சினால் கடினமான காரியங்களையும் சுபலமாக முடித்து விடுவீர்கள். சிலருக்கு புதிய மொழிகளைக் கற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.  அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் நாணயமாக நடந்து கொள்வார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய காலகட்டமிது. வாராக் கடன் என்று நினைத்திருந்த பணம் ஆச்சரியப்படும் வகையில் கை வந்து சேரும். சமூகத்தில் உயர்ந்தோர்களின் நட்பு கிடைத்து அதனால் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள்.  எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரை கூற வேண்டாம். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்புக்கும் கௌரவத்திற்கும் குறைவு வராது. உங்களின் சிறிய முயற்சிகளும் பெரிய வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.  உத்தியோகஸ்தர்கள் கொடுத்த வேலைகளை மனம் சலிப்படையாமல் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி நட்பாக நடந்து கொள்வார்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகள் நல்ல லாபம் ஈடுட்டுவார்கள்.  உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகளுக்கு அமோக விளைச்சலால் லாபத்தை அள்ளுவீர்கள். கால்நடைகளை வைத்திருப்போர் கூடுதல் வருமானம் பெறுவார்கள். பால் வியாபாரிகள் நலம் கூடக் காண்பார்கள். வயல் வரப்பு பிரச்னைகளில்  தீர்ப்புகள் உண்டாகும்.  அரசியல்வாதிகள் தங்கள் எண்ணங்களைச் சரியாக வெளிப்படுத்தவும். அவைகள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்படலாம். முக்கியப் பிரச்னைகளில் எதையும் பேசி மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். பெயர், புகழ் பெறுவதற்காக சாதனைகளைச் செய்வீர்கள்.  பெண்மணிகளுக்கு இந்த ஆண்டு குடும்பத்தில் அமைதியும் கணவரிடம் பாசமும் கூடும். புத்திர பாக்கியம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவும் கிடைக்கும்.  மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண்களையும் பெறுவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளிலும் சேர்வீர்கள். எக்காலத்திலும் உங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு இந்த ஆண்டு சிறப்பாக கிடைக்கும்.  பரிகாரம்: பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். ***** தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2019 (மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் பலமான ஓர் அஸ்திவாரம் ஏற்பட்டுவிடும். தற்காலிக வாய்ப்புகள் நிரந்தரமாகிவிடும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உடன்பிறந்தோரும் அனுசரித்து நடந்துகொள்வார்கள்.  பொருளாதார நிலைமை உயர்ந்து காணப்படும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் சேர்வார்கள். சிலர் தம் வசமுள்ள விலையுயர்ந்த பொருள்களை விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு புதிய நிலம், வீடு வாங்கவும் வாய்ப்புண்டாகும். அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஆதாயமும் அனுகூலமும் வந்து சேரும். கடந்த காலத்தில் உழைப்புக்குக் கிடைக்காத மதிப்பும் வசதியும் இந்த காலத்தில் உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சகஜமான நிலை உண்டாகும். திருமண வயதைத் தாண்டியும்  திருமணமாகாமல் தடுமாறிக் கொண்டிருந்தவர்களுக்குத் திருமணப் பிராப்தம் கூடி வரும்.  எதிரிகளின் தொல்லைகளுக்கு ஆட்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து மீண்டு வருவார்கள். தொடர்ந்த உடலுபாதைகளால் மனச்சஞ்சலம் அடைந்திருந்தவர்கள் முழுமையாக தேக ஆரோக்கியத்தைப் பெற்று மகிழ்ச்சியடைவார்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தாலும் அவர்களைத் திருப்திப்படுத்த முடியாமல் போகும் காலகட்டமாக இது அமைகிறது. ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் வர்த்தகம் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணமுடை என்கிற பேச்சுக்கே இடமிராது. தீவிர முயற்சியின் பேரில் புதிய கடன் பெற்று புது வீடு கட்டவும் சந்தர்ப்பம் கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய பணமும் கைவந்து சேரும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து அவர்களின் சிபாரிசின் பேரில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.  எதிரிகளின் சூழ்ச்சிகளை முன்னதாகவே அறிந்து அதற்கான தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். புகழ், கீர்த்தி, செல்வாக்கு, கௌரவம் யாவும் மேன்மேலும் அதிகரிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாகவே முடிவடையும். உடலில் இருந்த சோர்வுகள் நீங்கி உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். உங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். இதனால் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணவரவும் நன்றாக இருக்கும். காலநேரங்களை வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளவும். வியாபாரிகளுக்கு சற்று கூடுதலான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் அதிகமான லாபங்களைக் காண்பீர்கள்.  சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். பழையக் கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். கூட்டாளிகளிடமும் நண்பர்களிடமும் கலந்தாலோசித்தப்பிறகே அனைத்து செயல்களையும் நிறைவேற்றவும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். விளைச்சல் நன்றாக இருக்கும்.  இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்துவீர்கள். புதிய முயற்சிகளில் துணிந்து ஈடுபடலாம். கால்நடைகளாலும் நல்ல பலன் கிடைக்கும். பாசனம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவும். குத்தகை வருவாயும் தானிய விற்பனையும் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். தொண்டர்களை உற்சாகப் படுத்துவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். அதிக முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவு மழையில் நனைவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். உற்றார் உறவினர்கள் உங்கள் பேச்சைக் குறை கூறுவார்கள்.  குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவமணிகள் நீண்ட கால திட்டங்கள் தீட்ட இது உகந்த நேரம். கிரிக்கெட் போன்ற வெளிவிளையாட்டுகளில் ஈடுபடலாம்.  நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும்.  போதிய பயிற்சிகளை மேற்கொண்டு நிறைய மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.  பரிகாரம்: பார்வதி, பரமேஸ்வரரை வழிபடவும். பிரதோஷ காலங்களில் ரிஷபாரூடரை தரிசிக்கவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...