திங்கள்கிழமை 22 ஜூலை 2019

மகரம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** மகரம் (CAPRICORN) இது ஒரு பெண் ராசி. பூமி ராசி மற்றும் சர ராசி. இதன் அதிபதி சனி. இங்குதான் செவ்வாய் உச்சம் பெறுகிறார். குரு நீசம் பெறுகிறார். பொதுவாக, சனியானவர் எதற்கும் தடங்கல்களைக் கொடுப்பவராகவும், எதிலும் ஏற்றத்தை தராதவராகவும், பொறுப்புகளைக் கொடுப்பவராகவும்தான் கருதப்படுகிறார். இதுவும் ஒரு நாலு கால் ராசி. இதனுடய உருவம் ஆடு. இதனுடைய சின்னம் J. இதுதான் உடலிலுள்ள எலும்புகள், முழங்கால் மூட்டுகள் இவற்றையெல்லாம் குறிக்கிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இது எதிரியின் வீடு. ஆனால் சுக்கிரனுக்கும் புதனுக்கும் இது நண்பனின் வீடு. இது ஒரு பூமி ராசியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் செலவைக் குறைப்பதில் நாட்டம் உள்ளவராகவும் நியாயஸ்தர்களாகவும் எதையும் யோசித்துச் செயல்படுபவர்களாகவும், கடின உழைப்பை மேற்கொள்பவராகவும் இருப்பார்கள். இந்த ராசிக்கு சனி அதிபதியாவதால், 6-ம் வீட்டுடன் சம்பந்தப்பட்டால் மூட்டு வலிகள், தோல் சம்மந்தமான வியாதிகள் ஆகியவை வரக்கூடும்.​

இன்று

ஜூலை 21

இன்று பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும்.  உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், செரிமானக் கோளாறு, கைகால், மூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். உற்றார்-உறவினர்களின் ஆதரவைப்பெற சில நேரங்களில் அவர்களை மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, கருநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4 

இந்த வாரம்

ஜூலை 19 - ஜூலை 25 (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) உங்கள் எல்லா செயல்களும் திட்டமிட்டதுபோல் நடக்கும். குடும்ப நலம் சீராகும். உடன்பிறந்தோரால் நல்லதும் கெட்டதும் கலந்து நடக்கும். அவர்களிடம் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளவும். உத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அலுவலக வேலைகளைச் செய்வார்கள். சக ஊழியர்கள் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே இருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவதை ஒத்தி வைக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் குறைவாகவே இருக்கும். மாற்றுப்பயிர்களை உற்பத்தி செய்யலாம். கால்நடைகளால் சில செலவுகளையும் சந்திக்க நேரிடும்.  அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணிகளில் நாட்டம் குறையும். தொண்டர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும். கலைத்துறையினருக்கு முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும்.  பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். வெளிவிஷயங்களில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும்.  பரிகாரம்: புதன்கிழமையன்று ஸ்ரீ ராமரை பூஜித்து வரவும். குலதெய்வ வழிபாடு அவசியம்.  அனுகூலமான தினங்கள்: 22, 25.  சந்திராஷ்டமம்:  இல்லை.

இந்த மாதம்

ஜூலை மாத பலன்கள் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் குரு (வ) -  விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். எனவே கவனமாக இருப்பது  நல்லது. லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி  இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். கணவன், மனைவியிடையே மனஸ்தாபங்கள் அகலும். எனவே கவனமாக எதையும் பேசுவது நல்லது.  பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும். கலைத்துறையினருக்கு தேவையான  பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட  நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

உத்திராடம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன்,  மனைவிக் கிடையே வாக்குவாதம்,  பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். 

திருவோணம்:
இந்த மாதம் வீட்டில் உள்ள பொருட் களை கவனமாக பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும்  வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும்.

அவிட்டம்:
இந்த மாதம் காரிய தடை, தாமதம் உண்டாகலாம். எனினும் எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும். அடுத்தவர் குற்றச் சாட்டுகளில்  இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. 

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரபகவானை நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26,
 

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) இந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். செய்தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களால் அரிய உதவிகளும் கிடைக்கும். புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி புதிய துறைகளில் ஈடுபடுவீர்கள். தொல்லை கொடுத்து வந்த வேலைக்காரர்கள் அடங்கி வேலைச் செய்வார்கள். உங்கள் செயலாற்றும் திறனை அனைவரும் பாராட்டுவார்கள். வழக்குகளிலிருந்து நிரபராதியாக வெளிவருவீர்கள்.  குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்களிடம் அனுசரணையாக இருப்பார்கள். உடன்பிறந்தோர் உங்கள் பேச்சுக்குக் கட்டுப்படுவார்கள். சிலருக்கு அயல்நாடு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும். இக்கட்டான தருணங்களில் உங்கள் சமயோசித புத்தி கைகொடுக்கும். அமைதியாகவும் சீரிய ஒழுக்கத்துடனும் செயலாற்றுவீர்கள். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். வறியவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்தடையும். இந்த காலகட்டத்தில் மனதில் பட்டதையெல்லாம் வெளியில் பேசிவிட வேண்டாம்.  ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மனதிற்கினிய பயணங்கள் செய்ய நேரிடும். பல ஆண்டுகளாக பார்க்காமல் இருந்த நண்பர்களை இந்த காலகட்டத்தில் ஆச்சரியப்படும் விதமாகச் சந்திப்பீர்கள். மனதிற்கினிய சமூக விழாக்களில் கலந்துகொள்வீர்கள்.  ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேராகச் சிந்திக்கத் தொடங்குவீர்கள். பாதியில் நின்றுவிட்ட வீட்டைக் கட்டி முடித்து விடுவீர்கள். புதிய வீட்டிற்கும் கிரகப் பிரவேசம் செய்வீர்கள். தனிமையில் வருந்திய நீங்கள் பிரகாசமாக உலா வருவீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களில் இருந்து ஆதாயம் கிடைக்கும். பெரும்பான்மையான காலம் சிறப்பாகவே செல்லும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.  உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சந்தோஷமாக முடியும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். வேலையில் சுமை குறையும்.  விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும். அதிகமாக உழைத்து இரட்டிப்பு வருமானத்தையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் போட்டியாளர்களால் சில எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றைச் சமாளிப்பீர்கள்.  வியாபாரத்திற்காகக் கடன் வாங்க நேரிடும். கடன்கொடுத்து வியாபாரம் செய்வதைத் தவிர்க்க முடியாது. நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உங்கள் செல்வாக்குக்கு எந்தக் குறைவும் இருக்காது. விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். கால்நடைகளால் லாபம் அடைவீர்கள். குடும்பத்திற்கு நன்மைகளைச் செய்ய முற்படுவீர்கள். நீர்வரத்தைச் சேகரித்துக் கொள்ள பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள். அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். புதிய பொறுப்புகள் உங்களை வந்தடையும். சக அதிகாரிகளிடம்  உங்கள் செல்வாக்கு உயரும். உட்கட்சிப் பூசலினால் சிறிது வருத்தமடைவீர்கள். கலைத்துறையினருக்கு இது குதூகலமான ஆண்டாகும். வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். வாய்ப்புகள் தானாகவே வரும். ரசிகர்களின் ஆதரவுடன் புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.  பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவை கிடைக்கும். குடும்பத்திலிருந்து பிரிந்தவர்கள் கூடுவார்கள். பெற்றோர் வழியில் சிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும். மாணவமணிகள் விளையாட்டில் நன்கு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். படிப்பில் நேர்த்தியுடன் ஈடுபடுவீர்கள். பாடங்களைத் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் படித்து முன்னேறுவீர்கள். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும்  வழிபடவும். ***** தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2019 (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் ஒரு முக்கியமான விஷயத்தில் முடிவு ஏற்படும். எடுத்த காரியங்களில்  பெருமளவு வெற்றியும் விவாக சம்பந்தமான நிச்சய தாம்பூலம் முதலியன ஏற்படும். பணப்புழக்கம் ஓரளவு சரளமான முறையில் காணப்படும். சிறிது தூரப் பிரயாணங்களையும் செய்வீர்கள். சொத்து சம்பந்தமாக ஏற்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். பாகப்பிரிவினையும் சுமுகமாக முடியும். சிலருக்கு புதிய நிலம் வாங்கும் யோகமும் உண்டாகும். அரசாங்கத்தால் சில நன்மைகளும் உண்டு. சமூகத்தில் உயர்ந்தோரின் ஆதரவு கிடைக்கும். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்பட தாமதமாகலாம். கடினமாக உழைக்க வேண்டியும் இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து ஆதரவு தேடி வரும். உடன்பிறப்புகள் இணக்கமாக பழகுவார்கள். சிலருக்கு பட்டப் பதவிகள் கிடைக்கும். ஒரு புதிய விஷயங்கள் அனுகூலமாக முடியும். தற்சமயம் செய்துவரும் தொழிலுடன் ஒரு நூதனத் தொழில் ஏற்படுதல் போன்ற நல்ல விஷயங்களும் நடைபெறும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகளுக்காக தருமம் செய்வீர்கள். புனித ஆலயங்களுக்குக்கும் சென்று வரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயலாற்றுவீர்கள். பூமி, நிலம், வீடு போன்றவற்றில் எதிர்பார்த்த நற்பலன்கள் உண்டாகும். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து சுமுகமான நிலைமை ஏற்படும். இல்லத்தில் திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். போட்டி பொறாமைகள் அனைத்தும் மறைந்து நற்பலன்கள் உண்டாகும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாக கிடைக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். புதிய தொடர் சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தன சேர்க்கை உண்டாகும்.  குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அதைப்போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கு விசா கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் கிடைக்கும். புதியவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் கருணையோடு நடந்து கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். செயல்களை அவசரப்படாமல் விவேகத்துடன் செய்துமுடிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைகளில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். சாதுர்யத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும். உங்கள் பொறுப்புகளை எவரிடமும் ஒப்படைக்க வேண்டாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுவது நல்லது. மனத்தளர்ச்சிக்கு இடம்  தராமல் நடந்து கொண்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் வருமானம் திருப்திகரமாக கிடைக்கும்.  மேலும் வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். வியாபாரத்தில் சிறுசிறு இடையூறுகள் தோன்றினாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.  விவசாயிகள் மகசூல் மந்தமாக இருக்கும். விவசாயப் பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தானிய விற்பனையின் மூலம் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வது நல்லது.  அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து  தப்பித்து விடுவீர்கள். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் நண்பர்களாக மாறிவிடுவார்கள். திட்டமிட்ட பணிகள் யாவும் குறித்த இலக்குகளை அடைந்துவிடும். நெடுநாளைய லட்சியம் பூர்த்தியாகும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு பிரச்னைகள் தோன்றினாலும் முடிவு சாதகமாகவே இருக்கும்.  புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். நண்பர்களால் நன்மை அடைவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். சிரத்தையாக படித்து மதிப்பெண்களை அள்ளுவார்கள். கடுமையாக உழைப்பீர்கள். விளையாட்டில் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்ளவும்.  பரிகாரம்: பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் தாயாரை வழிபடவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...