01 செப்டம்பர் 2019

கடகம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** கடகம் (CANCER) இது ஒரு பெண் ராசி. அத்துடன் நீர் ராசியும்கூட. இது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிற சர ராசி வகையைச் சேர்ந்தது. இந்த ராசியின் உருவம் நண்டு. இதை D என்ற குறியீட்டால் குறிப்பார்கள். அதாவது, நண்டின் கால்கள்தான் இந்த உருவம். உடல் உறுப்புகளில் மார்பையும், வயிற்றுப் பகுதியையும் குறிப்பது இந்த ராசி. இந்த ராசிக்காரர்கள் வயிறு சம்பந்தமான பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகளால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். இது ஒரு ஊமை ராசியும்கூட. பிறவியில் பேச முடியாதவர்களுக்கு வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டோடு இந்த ராசி சம்மந்தப்பட்டிருக்கும். இந்த ராசியில் குருவானவர் உச்சம் பெறுகிறார். செவ்வாய் நீச்சம் பெறுகிறார். இதன் அதிபதி சந்திரன். சந்திரன் வளர்ந்து தேய்வதுபோல், இவர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள்.

இன்று


செப்டம்பர் 1

இன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

இந்த வாரம்

ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 5 (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) உங்களின் பேச்சு மற்றும் செயல்களில் ஒரு மிடுக்கு தெரியும். செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பயணங்கள் பலன் தரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறைந்து காணப்படும். மேலதிகாரிகள் பரிவுடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் முயற்சிகளில் பின்வாங்காமல் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். வியாபாரத்தையும் பெருக்குவார்கள். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். மகசூல் நன்றாக இருக்கும்.
 
அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய படைப்புகளை உருவாக்க ஆர்வம் அதிகரிக்கும். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். பெண்மணிகளுக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவமணிகள் எதிர்பாராத உதவிகளைப் பெறுவார்கள். போதிய பயிற்சிகளை மேற்கொண்டு நிறைய மதிப்பெண்களை அள்ளுவார்கள். பரிகாரம்: சனிக்கிழமைகளில் வேங்கடேசப் பெருமாளை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 1, 2. சந்திராஷ்டமம்: இல்லை.

இந்த மாதம்

ஆகஸ்ட் மாத பலன்கள் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) எதையும் ஆழமாக யோசித்து திறமையுடன் செய்து முடிக்கும் கடக ராசியினரே நீங்கள் குடும்பத்தினரின் மீது அதிக பாசம் வைத்திருப்பவர்கள். இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தைரியம் அதிகரிக்கும்.  தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் ராசியில் இருக்கிறார். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. நீண்ட நாட்களாக தொழிலில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மை தரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன்  நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும்.   நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.  கலைத்துறையினருக்கு நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சுத் திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.   அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரலாம்.  மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

புனர்பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பூசம்:
இந்த மாதம் எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். ராசியாதிபதி சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்று சஞ்சாரம் செய்வதால் பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். 

ஆயில்யம்:
இந்த மாதம் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள்  கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும்.

பரிகாரம்: அம்மனுக்கு பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27,

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்கள் குறித்த காலத்திற்கு முன்பாகவே முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடத்தொடங்கும். தேடாமலேயே விரும்பியவை கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாட்டிற்கு பயணப்படுவதற்கு வாய்ப்புகள் தேடி வரும்.  ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் அதிர்ஷ்ட வாய்ப்புகள்  கிடைக்கும். அரசு அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். சிலருக்கு விருது பெரும் யோகமும் உண்டாகும். அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள் தேடி வரும். தோற்றத்தில் பொலிவு ஏற்படும். வாசனை திரவியங்களை பயன்படுத்துவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.  பழைய காலத்தில் உதவி செய்வதாக வாக்களித்தவர்கள் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்கள். உங்களின் புத்திசாலித்தனமும் தன்னம்பிக்கையும் கூடும். போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். பிள்ளைகள் விரும்பிய பாடப்பிரிவுகளிலும் விரும்பிய கல்லூரிகளிலும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இக்கட்டான தருணங்களில் உங்களின் சமயோசித புத்தி கைகொடுக்கும். ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களும் கூட்டாளிகளும் உதவிகரமாக இருப்பார்கள். செய்தொழில் சிறப்பான வளர்ச்சி அடையும். அரசு வேலைக்குக் காத்துக்கொண்டிருந்தவர்கள் அதைப் பெறுவார்கள். விரும்பிய இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். வரவேண்டிய இடத்திலிருந்து பணம் கைவந்து சேரும். பங்கு மார்கெட் போன்ற துறைகளிலிருந்தும் ஆதாயங்களைப் பெறுவீர்கள். நெடுங்காலம் விற்காமல் இருந்த நிலம், வீடு நல்ல விலைக்கு விற்பனையாகி சேமிப்புகள் உயரத்தொடங்கும். குழந்தைகள் படிப்பில் சாதனைகளைச் செய்வார்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த சங்கடங்களும் இடையூறுகளும் மறையும்.  எவரிடமும் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.  முக்கிய முடிவுகளை தக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பின்பே எடுக்கவும். உங்கள் எண்ணங்களை மற்றவர்கள் மீது திணிக்க வேண்டாம். எச்சரிக்கையுடன் இருந்து மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கவும். எவரிடமும் வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டிய ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு சற்று கூடும். உழைப்பிற்கேர்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் பகைமை பாராட்ட நேரிடலாம். எல்ல காரியங்களிலும் காலதாமதம் ஏற்படும். உடலில் சோர்வும் மனதில் தெளிவற்ற தன்மையும் காணப்படும்.  வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். முயற்சிகள் அனைத்தும் காலம் தாழ்த்தியே பலன் தரும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடியும். விவசாயிகளுக்கு மகசூல் சீராக இருக்கும். கொள்முதல் லாபங்களும் தொடருமாகையால் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். வேலை செய்பவர்களை அனுசரித்துச் சென்று உங்கள் கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் புகழின் ஏணியில் ஏறத் தொடங்குவீர்கள். கட்சி மேலிடத்தின் கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மக்களுக்கு உதவும் முக்கிய பிரச்னைகளை முன்னின்று ஒடுக்க முயல்வர். எதிரிகளின் பலம் குறையும்.  அரசு அதிகாரிகளிடம் தேவையான ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு சுமாரான வாய்ப்புகளே கிடைக்கும். ஆக்கபூர்வமான எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். உடல்நலம் மனநலம் இரண்டும் சிறப்பாக அமையும். ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்திலும் நண்பர்களிடத்திலும் சுமுகமாகப் பழகவும். மாணவமணிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும். கல்வியில் ஆர்வம் குறைந்து காணப்படுவதால் ஒருமுறைக்கு இருமுறை படித்து மனப்பாடம் செய்து படிக்கவும். ஆசிரியர்களின் ஆதரவு குறைந்து காணப்படும். பரிகாரம்: துர்க்கை வழிபாடு சிறந்தது.  ***** தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2019 (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் பிரச்னைகள் அனைத்தும் நீங்கி அமைதி பூத்துக்குலுங்கும். முகத்தில் புதுப்பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். தைரியமாக முயற்சிகளைச் செயல்படுத்த துவங்குவீர்கள். மனதில் இருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் நீங்கி தெளிவு உண்டாகும்.  பெற்றோர்களின் ஆதரவு சிறப்பாகக் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான பாகப் பிரிவினைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளின் மூலமும்  வருமானம் வரத்தொடங்கும். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் இனி நிச்சயமாக நடக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சிலர் பழைய வாகனத்தை விற்று புதிய வாகனத்தை வாங்குவார்கள். நெடுநாளாக விற்காமல் இருந்த சொத்துகளை விற்று அதன் மூலம் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.  உடன்பிறந்தோரிடம் தாமரை இலைத் தண்ணீர் போல் பழக வேண்டுமே தவிர நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பது நல்லதாகும். வங்கியில் அடமானம் வைத்திருக்கும் நகைகளை மீட்டு விடுவீர்கள். கடந்த காலத்தில் உழைப்புக்குக் கிடைக்காத மதிப்பும்  மரியாதையும் இந்த காலகட்டத்தில் கிடைக்கும்.  ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயற்கரிய காரியங்கள் பலவற்றைச் செய்து அதன்மூலம் சமுதாயத்தில் பெரும் புகழ் அடைவீர்கள். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு உயர்ந்து புதிய சலுகைகளையும் பெறுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். குடும்ப நிர்வாகமும் மகிழ்ச்சிக்குரியதாகவே இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும், குழந்தைப்பேறும் உண்டாகும்.  

உங்களை குற்றம் குறை கூறிக்கொண்டிருந்தவர்கள் புகழத் தொடங்குவார்கள். எதிர்காலத்தில் சற்று தலைநிமிர்ந்து நடப்பதற்கான வசதி வாய்ப்புகள் எதிர்பாராத வகையில் உண்டாகும். செய்தொழிலிலும் இடைத்தரகர்கள் விலகி நேரடியாகப் பொருள்களை விற்று லாபம் காண்பீர்கள். குழந்தைகள் வகையில் இருந்த சிரமங்கள்  மறைந்து நிலைமை சீராகும். அடிக்கடி பயணங்கள் செய்து செய்தொழிலை மேன்மையடையச் செய்வீர்கள். யோகா, பிராணாயாமம் செய்து உடல்நலம் மனவளம் இரண்டையும் மேம்படுத்திக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.    
 
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவார்கள். கடின உழைப்பையே தாரக மந்திரமாகக் கொண்டு உழைக்கவும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப்பழகவும். சிலர் அனாவசியமாக உங்களிடம் பகைமை பாராட்டுவார்கள். வருமானத்திற்கு குறைவில்லை. அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டு. மதிப்பு, கௌரவம் கூடும்.  வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் விஷயமாக அக்கறை காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் லாபங்களைக் காண்பீர்கள். 

சமயோஜித புத்தியால் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும்.  அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். விவசாயிகள் திருப்திகரமான மகசூலைக் காண்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவீர்கள். மாற்றுப் பயிர்களை பயிரிட்டு லாபம் காண்பீர்கள்.  அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் காரியங்களில்  தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி காண்பீர்கள். பெயரும் புகழும் அதிகரிக்கும். முக்கிய தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும்  வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உள்ளத்தில் புதிய தெளிவுகளைப் பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறையும். தொண்டர்களின் குறைகளை அக்கறையுடன் பரிசீலித்து தீர்க்க முயற்சிப்பீர்கள். வருமானம் பலவழிகளிலும் வந்து கொண்டே இருக்கும்.  கலைத்துறையினருக்கு வருமானம் ஓரளவு சீராக இருக்கும். முக்கிய முடிவுகளை உயர்ந்தோரைச் சந்தித்து எடுக்கவும். திறமைகளை வளர்த்துக்கொள்ள புதிய பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள்.  நாடிவரும் நண்பர்களுக்குத் தயங்காமல் உதவி செய்வீர்கள். உடன்பிறந்தோர் அன்பாக இருப்பார்கள். எவரிடமும் பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் எடுக்கும் முயற்சிகளுக்குத் தகுந்தவாறு மதிப்பெண்கள் பெறுவார்கள். பாடங்களை உடனுக்குடன் படித்து மனதில் நிறுத்துவது நல்லது. வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.  விளையாட்டில் ஆர்வத்தைச் சற்றுக் குறைத்துக் கொள்ளவும். பரிகாரம்: குலதெய்வ வழிபாடும். சப்த கன்னிகைகளின் வழிபாடும் சிறந்தது.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...