08 செப்டம்பர் 2019

மேஷம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** மேஷம் (ARIES) இது ஒரு ஆண் ராசி. நெருப்பு ராசியும்கூட. இது ஒரு நான்கு கால் ராசி. செம்மறி ஆட்டின் உருவம் கொண்ட ராசி. இதை A என்ற அடையாளத்தால் குறிப்பார்கள். இந்தக் குறியீடு, ஒரு செம்மறி ஆடு நீண்ட மூக்குடனும், இரண்டு காதுகளுடன் இருப்பதுபோல் தெரிகிறது அல்லவா! இது ஒரு சர ராசி. அதாவது, நகரும் தன்மை கொண்ட ராசி. இதற்கு அதிபதி செவ்வாய். சூரியன் இந்த ராசியில்தான் உச்சம் பெறுகிறார். சனி இங்குதான் நீச்சம் பெறுகிறார். இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால், இந்த ராசியை லக்கினமாகக் கொண்டவர்கள், மிகவும் சுறுசுறுப்பு உடையவர்களாகவும், முன்னேறத் துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த லக்கினம், மற்ற கிரகங்களால் கெட்ட பார்வையால் பார்க்கப்பட்டால், அவர்கள் மிகுந்த அவசரக்காரர்களாகவும், நிதானித்துச் செயல்படாதவர்களாகவும் இருப்பார்கள். அதுவே, நல்ல பார்வையால் பார்க்கப்பட்டால் நிதானம் மிக்கவர்களாகவும், தைரியத்துடன் எதையும் எதிர்கொள்பவராகவும் இருப்பார்கள். உடல் உறுப்புகளில் தலையைக் குறிப்பது இந்த ராசிதான்.

இன்று

செப்டம்பர் 8 

இன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
 

இந்த வாரம்

செப்டம்பர் 6 - செப்டம்பர் 12 (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) மகிழ்ச்சி பொங்கும் காலம். தேவையற்ற விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் கொக்குக்கு ஒன்றே மதி என்கிற ரீதியில் நடந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். பயணங்களை மேற்கொண்டு ஆதாயங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்பிற்கு ஏற்ற பலனை அனுபவிப்பார்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிறு முதலீடுகளைச் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். நீர்ப்பாசன வசதிகளுக்காக செலவுகள் செய்ய நேரிடும்.
அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும் தொண்டர்களின் ஆதரவும் நன்றாக இருக்கும்.  கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனத்தைச் செலுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். பெற்றோரின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். பரிகாரம்: “ஜெய துர்க்கா, ஜெய துர்க்கா’ என்று ஜபித்து துர்க்கையை வணங்கவும்.  அனுகூலமான தினங்கள்: 7, 8.  சந்திராஷ்டமம்: 6.

இந்த மாதம்

செப்டம்பர் மாத பலன்கள்  (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் - ரண ருண ஸ்தானத்தில்  சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில்  குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
நண்பர்கள் வட்டாரம் அதிகம் கொண்டுள்ள மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

குடும்பத்தில் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துவீர்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் நல்ல உயர்வுகளைப் பெறமுடியும். நிலுவையில் இருந்த பணப்பாக்கிகளும் திருப்திகரமாக கைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய காலமாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.  மாணவர்கள் கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை.

அஸ்வினி:
இந்த மாதம் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். தைரியமாகவும் அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். 

பரணி:
இந்த மாதம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். 

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். 

பரிகாரம்: தினமும் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று வர பிரச்சினைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019 (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பெரியோர்களைத் தேடிச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். நண்பர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்துச் செல்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செயல்களுக்கு வரவேற்பு கிடைக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.  உடன்பிறந்தோர் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.  உங்கள் எண்ணங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் வலிமையாக எடுத்துக்கூறி சாதித்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பையே நம்பி வாழ்வீர்கள். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் ஏற்படாது. உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களைத் தட்டிக் கொடுத்து செல்வீர்கள். பழைய நண்பர்களையும் மறக்க மாட்டீர்கள். எவருக்கும் அவர்கள் கேட்காமலே அறிவுரைகளைக் கூற வேண்டாம். எவரும் உங்களை இந்த காலக்கட்டத்தில் ஏமாற்ற முடியாது. உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்றும் இந்த காலகட்டத்தில் பூர்த்தியாகும். ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பல காரியங்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டு அவைகளைப் பதற்றமில்லாமல் செய்து முடிப்பீர்கள். கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம், மனவளம் மேம்பட, யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். ஆன்மிகத்திலும் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.  வருமானம் சீராகவே இருக்கும். ஓரளவு பணம் மிச்சப்படும். சேமிப்புகளும் உயரும். பேச்சில் வசீகரம் கூடும். வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவீர்கள். உற்றார் உறவினர் மற்றும் உடன்பிறந்தோரிடம் பாசமாகப் பழகுவீர்கள். பெற்றோர் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். முக்கிய வேலைகளை ரகசியமாக வைத்துக் கொள்ளவும். புதிய வருமானம் பெற சில திட்டங்களைத் தீட்டுவீர்கள்.  வெளிநாடுகளுக்கு உத்தியோகம் அல்லது கல்விப் பயணம் செய்ய நேரிடும். அரசு அரசாங்க  அதிகாரிகளின் உதவிகளும் கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். நூதனமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள் என்றால் மிகையாகாது.  உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி கரிசனத்துடன் நடந்துகொள்வார்கள். வேலைகளை பதற்றப்படாமல்  அமைதியாகச் செய்வீர்கள். அனுபவங்களால் முக்கிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். வியாபாரிகளுக்கு முன்னேற்றமடைய அதிகமான முதலீடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். போட்டியின் காரணமாக நீங்கள் சற்று அதிகமான அலைச்சல்களைச் சந்திப்பீர்கள்.  வங்கிகளிடமிருந்து விரும்பியபடி கடன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.கொடுக்கல் வாங்கல்களில் இருந்த கருத்து வேறுபாடுகளும் விரோதங்களும் மறையும். விவசாயிகள் பிற்காலத் திட்டங்களுக்காக செலவுகள் செய்ய நேரிடும். நீர்ப்பாசனத்தைப் பெருக்கி நல்ல விளைச்சலைப் பெற முயற்சி செய்வீர்கள். மகசூல் நன்றாக இருப்பதால் இந்த ஆண்டு கழனிகளை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும் என்றால் மிகையாகாது.  அரசியல்வாதிகள் எதிலும் எப்பொழுதும்  எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில் உங்கள் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படலாம். கலைத்துறையினருக்கு இந்த ஆண்டு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சக கலைஞர்களால் பணவசதியும் விருதுபெறும் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையை காண்பீர்கள். புதிய ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பயணங்களின் போது உடைமைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்ளவும். மாணவமணிகள் சாதகமான திருப்பங்களைக் காண்பார்கள். வருங்காலத்திற்காக நீங்கள் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உற்சாகமான மனநிலையில் இருக்கும் அண்டாக அமைகிறது என்றால் மிகையாகாது. பரிகாரம்: பிரதோஷ காலத்தில் பார்வதி பரமேஸ்வரர்களை தரிசிக்கவும். ***** தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2019 (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் தேவையான பணம் வந்து கொண்டே இருக்கும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு என்று எதுவும் ஏற்படாது. அவசரமாக முடிக்க வேண்டிய காரியங்களையும் தொடர் வேலைகளுக்கிடையே செய்து முடித்து வெற்றியடைவீர்கள். உடற்பயிற்சி செய்வதில் அக்கறை அவசியம்.  அக்கம்பக்கத்தில் பெருமையுடன் பேசப்படுவீர்கள். மற்றவர்களுக்கு பயன்படும் படியான பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவீர்கள். தானதர்மங்களிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். சிலருக்கு புதிய நிலம், வீடு, வாங்கும் யோகம் உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். செய்தொழிலில் எடுத்த வேலைகள் அனைத்தும் சீராய் முடியும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். சமுதாயத்தில் நல்ல பெயரெடுப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பை சுலபமாகப் பெறுவீர்கள்.  திறமைகளைக் கொண்டு புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். செயல்களில் நியாயத்தையும் கடைபிடிப்பீர்கள். நேர்மறையாக சிந்தித்து காரியமாற்றும் காலகட்டமாக இது அமைகிறது. ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எதிரிகளை வாக்கு சாதுர்யத்தினால் நயமாகப் பேசி வென்றுவிடுவீர்கள். முகத்தில் புதுப் பொலிவு உண்டாகும். நடையிலும் மிடுக்கு உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் சிறப்பான அபிவிருத்தியையும் பெறுவீர்கள்.  புதிய முன்னேற்றப் பாதையில் பயணப்படத் தொடங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆமை வேகத்தில் நடந்த செயல்கள் அனைத்தும் துரித வேகத்தில் நடக்கத் தொடங்கும். பழையக் கடன்களை முழுவதுமாகத் திருப்பி அடைத்து விடுவீர்கள்.  குடும்பத்தில் அனைத்தும் நிறைந்து குறையொன்றுமில்லை என்கிற அளவுக்கு மகிழ்ச்சி நிலவும். எதிரிகளும் போட்டியாளர்களும் மறைந்து விடுவார்கள். செய்தொழிலை வேறு ஊர்களுக்கும் சென்று விரிவுபடுத்துவீர்கள். அன்னையின் அன்பும் பாசமும் கிடைக்கும். அந்த வழியில் பூர்வீகச் சொத்துகளும் வந்து சேரும். பெற்றோருடன் இணக்கமாக வாழும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உன்னதமான பதவிகளைப் பெறுவார்கள். உங்களுக்கு எதிராக சதி செய்தவர்கள் அடங்கி விடுவார்கள். வருமானம் பலமடங்கு உயரும். இதனால் குடும்பத்தின் தேவைகளை சுலபமாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். அலுவலகத்தில் சில முக்கிய அதிகாரிகள் உங்களுக்கு கருணை காட்டுவார்கள். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப் படுவார்கள். திறமைகளை வளர்த்துக்கொள்ள  தேவையான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக முடியும். கூட்டாளிகள் நட்புடன் பழகுவார்கள். அவர்களுடனான பழைய பிணக்குகளை மறந்து விடவும். அரசு வகையில் சிரமங்கள் ஏதும் வராது. விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைக்கும். விளைச்சலில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். உற்சாகமாக பணியாற்றுவீர்கள். கரும்பு பயிர் செய்பவர்கள் நல்ல வருமானத்தைக் காண்பார்கள். பழைய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். எதிலும் விழிப்புடன் இருங்கள்.  அரசியல்வாதிகளுக்கு இந்த விகாரி ஆண்டில்  சில எதிர்ப்புகள் தோன்றினாலும் கௌரவத்திற்கு  அதனால் பங்கம் ஏதும் வராது. எவரிடமும் ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். தொண்டர்களிடம் உங்கள் பேச்சுக்கு வரவேற்பு இருக்கும். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் உற்சாகமான நிலையுடன் பணியாற்றுவீர்கள். பழைய ஒப்பந்தங்களை நன்றாக முடித்துக்கொடுத்து புதிய ஒப்பந்தங்களை பெறுவீர்கள்.  கைநழுவிப்போன வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.  உழைப்புக்கேற்ற வருமானம் தொடர்ந்து கிடைக்கும். புதிய முயற்சிகளில் கவனத்துடன் ஈடுபடவும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருக்கும். குடும்ப உறவினர்களிடம் உறவு நல்ல முறையில் இருக்கும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆத்ம பலம் பெறுங்கள்.  மாணவமணிகள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண்களையும் பெறுவீர்கள். விரும்பிய பாடங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நண்பர்களுடன் சிறுசிறு சலசலப்புகள் தோன்றினாலும் அவைகளால் பெறிய பாதிப்புகள் உண்டாகாது.  பரிகாரம்: "ஜய ஜய துர்க்கா' என்று ஜபித்து துர்க்கையை வழிபடவும்.

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...