புதன்கிழமை 22 மே 2019

கும்பம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). *** கும்பம் (AQUARIUS) இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசி. காற்று ராசியும்கூட. இதற்கும் அதிபதி சனிதான். இது காற்று ராசியாக இருப்பதால், மிகுந்த புத்திக்கூர்மையைத் தரக்கூடியது. நீருடன் உள்ள கும்பம்தான் இதன் அடையாளம். இதன் குறியீடு K. இந்த ராசி கணுக்கால் மற்றும் உடல் நரம்புகளைக் குறிக்கிறது. நரம்பு சம்பந்தமான VERICOSE என்னும் நோய் வரக்கூடும். இந்த வீடு சுக்கிரனுக்கும் புதனுக்கும் நட்பு வீடு. சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியோருக்குப் பகை வீடு. இந்த ராசியானது மற்ற கிரகங்களின் கெட்ட பார்வை பட்டால், சோம்பேறித்தனம் பற்றிக்கொள்ளும். எப்போதும் கவலையுடனும், எதிர்மறை எண்ணங்களுடனும் இருப்பார்கள்.

இன்று

மே 22

இன்று தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.  பயணங்கள்  செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலைப்பளு ஆகியவை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

இந்த வாரம்

(மே 17 முதல் மே 23 வரை) (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய) குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் வெற்றிவாகை சூடுவீர்கள். எல்லோருக்கும் உதவிகள் செய்து பெருமையடைவீர்கள்.பேசும் நேரத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்காது என்பதால் இருக்கும் இடத்திலேயே திறம்பட செயல்படுங்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தை அள்ளுவார்கள். சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும்.  அரசியல்வாதிகள் கவனத்துடன் இருக்க வேண்டிய காலமாகும். கட்சி மேலிடத்தில் உங்களால் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கலைத் துறையினர் திறமைகளை வளர்த்துக்கொண்டு மற்றவர்கள் பாராட்டும் படி நடந்து கொள்வார்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை ஓங்கும். வீட்டுக்குப் புதிய பொருள்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். விளையாட்டில் எதிர்பார்த்த வெற்றியைக் காண்பீர்கள். பரிகாரம்: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை மனதார பிரார்த்தனை செய்யவும்.  அனுகூலமான தினங்கள்: 22, 24.  சந்திராஷ்டமம்: இல்லை. 

இந்த மாதம்

மே மாத பலன்கள் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்) பிறரிடம் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பிரயோகிக்கும் ஆற்றல் பெற்ற  கும்ப ராசியினரே இந்த மாதம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட  நாள் கஷ்டங்கள் நீங்கும். பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். சுபச்செலவுகள் அதிகரிக்கச் செய்யும். வேண்டியவர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில்  அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக  பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு புகழ் சேர்க்கும் விதமாக வேலைகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பணத்தை எதிர்பார்த்ததை விட புகழ் சேர்க்கும் விதமாக அமையும். அரசியல்துறையினருக்கு நிம்மதியான காலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உல்லாச பயணமாகவும் அது அமையும். பேசும் போது மட்டும் கவனமுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்திற்கு உதவும்.

அவிட்டம்
இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும்.  உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

சதயம்
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.

பூரட்டாதி
இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10  
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் 

இந்த ஆண்டு

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2019 (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய) இந்த 2019 }ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் சுப திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். மணமாகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். கூட்டுத்தொழிலில் லாபமும் கூட்டாளிகளிடம் நேசம்  உண்டாகும்.  பயணங்களால் லாபமுண்டு. எடுத்த காரியங்களில் சுலபமாக வெற்றி பெறுவீர்கள். சிலர் புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். வீட்டிலும் வெளியிலும் பெயர் புகழ் வளரும். உடன்பிறந்தோர் மூலம் நலமும் செயற்கரிய சாதனைகள் செய்யவும் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறவும் வாய்ப்புகள் உண்டாகும். கடினமாக உழைத்தாலும்  சரியான நேரத்தில் ஆகாரத்தை எடுத்துக் கொள்வீர்கள். உடல் உழைப்புக்குத் தக்க பண வரவும் கிடைக்கும். பெற்றோர் வழியிலும் மருத்துவச் செலவுகள் குறையும்.  குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். தைரியம், தன்னம்பிக்கை வளரும். சிக்கல் வரும் என்று ஒதுக்கி வைத்திருந்த காரியங்களைக் கூட தூசி தட்டி எடுத்து புது மெருகுடன் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவைகள் தடங்களின்றி கிடைத்துவிடும். சந்தர்ப்பங்களைச் சரியாக உங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.  ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி புகழடைவீர்கள். தகுதிக்கு மீறிய பதவிகள் தேடிவரும்.    சிலருக்கு புதிய வருமான வாய்ப்பு மற்றும் விருதுபெறும் பாக்கியமும் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் புகழ், செல்வாக்கு பல மடங்கு உயரும். செயல்களை வேகமாகவும் விவேகமாகவும் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் தங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய காலத்தில்  உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் தற்போது உங்கள் முன்னேற்றத்துக்கு துணைபுரிவார்கள். நம்பி வந்து உதவி கேட்பவர்களுக்கு தக்க உதவிகள் செய்து புகழடைவீர்கள். ஆலய தரும காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் நுட்பங்களையும் கலைகளையும் கற்பீர்கள். பிரிந்திருந்த உறவினர்கள் திரும்ப வந்து சேர்வார்கள். தோற்றுவிடுவோம் என்று நினைத்திருந்த வழக்குகள் திடீரென்று சாதகமாக திசை திரும்பும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு சக ஊழியர்களின் ஆதரவினால்  வேலைப்பளு குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் பொறுமையுடன் இருக்கவும். தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவீர்கள். வேலைகளில் கெடுபிடிகள் குறையும். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றமடைவீர்கள். தொல்லை கொடுத்து வந்த கூட்டாளிகள் விலகிவிடுவார்கள். பணவரவு நன்றாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களை சுமுகமாக முடியும். புதிய சந்தைகளில் பொருள்களை விற்பீர்கள். கடன் சுமைகள் குறையும். விவசாயிகள் கூடுதல் விளைச்சல்களைக் காண்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். தரமிக்க விதைகளை வாங்கி மகசூலை இருமடங்காக்கி முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள்.  அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். தொண்டர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடித்து சாதனையாளர் என்கிற அளவிற்கு உயர்வீர்கள். நண்பர்கள்போல் பழகும் எதிரிகளிடம் உஷாராக இருக்கவும். கலைத்துறையினர் செய்யும் விடாமுயற்சிகள் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். சமூகத்தில் பெயரும் புகழும் உண்டாகும்.  பெண்மணிகள் பொருளாதாரத்தில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். உங்கள்கோரிக்கைகளை கணவர் உடனுக்குடன் நிறைவேற்றுவார். குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். சகோதர சகோதரிகள்  நட்புக்கரம் நீட்டுவார்கள். தெய்வ பலத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். மனக்குழப்பங்களுக்குத் தீர்வு காண்பீர்கள். மாணவமணிகள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகம் பாடுபட்டு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். பெற்றோர் தக்க ஆதரவைக் கொடுப்பார்கள். பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சூரிய நமஸ்காரம் செய்யவும். ***** தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2018 (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய) இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கஷ்டங்கள் பிரச்னைகள் அனைத்தும் கதிரவனைக் கண்ட பனிபோல் தீர்ந்துவிடும். உடலுழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றிக்குமேல் வெற்றி கிடைக்கும்.  வருமானத்தின் பெரும்பகுதியை சேமிக்கத் தொடங்குவீர்கள். சிறிய முதலீடுகளில் தொழிலைப் பெருக்கி நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். அதாவது சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறிவிடும். அவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்களும் வளர்ச்சி அடைந்து விடுவார்கள். முடிபெறாது இழுத்தடித்துக் கொண்டிருந்த வம்பு வழக்குகள் வெற்றி பெறும். தைரியமாக எதையும் சமாளிப்பீர்கள்.  பழைய கடன்களையும் திருப்பி அடைந்து விடுவீர்கள். புதிய  தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கும். சிலருக்கு அன்னியரின் சொத்து அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும். சொந்தவீடு வாகனம் வாங்கும் யோகங்கள் உண்டாகும். மனதிற்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் வெளியூரிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். மற்றபடி உங்களின் வாழ்க்கைத்தரம் சீரும் சிறப்புமாக இருக்கும் காலக்கட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது,  இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றலாம். இருப்பினும் செய்தொழிலில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. குழந்தைகளுக்கு சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு கலைத்துறையில் நாட்டம் ஏற்படும். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் பெற வாய்ப்புகள் தேடிவரும்.  பெற்றோர்களின் உடல்நலம் சீராகும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. உங்கள் பெயர் புகழ் அந்தஸ்து, கௌரவம் ஆகியவை கூடும். பங்கு வர்த்தகம் போன்றவைகளிலிருந்து தொடர்ந்து சிறு வருவாய் வந்து கொண்டிருக்கும். சிலர் பழைய வாகனங்களை விற்று  விட்டு புதிய வாகனங்களை வாங்குவார்கள். சமுதாயத்தில் உயர்தோரால் பாராட்டப் படுவீர்கள். உடன்பிறந்தோர் சற்று கூடுதலாக எதிர்பார்ப்பார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விவகாரங்களில் பெரியவர்களின் தலையீட்டினால் கோர்ட்டுக்குச் செல்லாமல் சமாதானமாகச் சென்று பாகப்பிரிவினையை ஏற்றுக்கொள்வீர்கள். எதையும் புத்தி கூர்மையுடனும் சமாளிக்கும் திறமை உண்டாகும் காலக்கட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வார்கள். சில தவிர்க்க முடியாத வேலைகளை உங்களுக்கு ஒதுக்குவார்கள். அதை முடித்துக்கொடுத்து உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்களிடம் நட்போடு பழகுவீர்கள். எந்த நேரம் என்னவாகுமோ என்ற அநாவசியப் பதட்டம் இருக்கும்.  வியாபாரிகளுக்கு போட்டிகளையும் பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் இருந்து அவைகளைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோசித புத்தியால் தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் புதிய வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யமாட்டார்கள்.  அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கௌரவமும் அந்தஸ்தும் உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.  கலைத்துறையினருக்கு  இந்த ஆண்டு வரவேற்பு அதிகரிக்கும். திறமைக்குத் தக்க அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த முனைய வேண்டாம்.  பெண்மணிகளுக்கு இந்த ஆண்டு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து செல்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் பெருமைபடும்படி மதிப்பெண்களைப் பெறுவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். 

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டு வரவும்.
 

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...