விழுப்புரம்

கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் சிறை

30th Sep 2023 05:07 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காவல் சரகரத்துக்குள்பட்ட பெரியமாம்பட்டு பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மனைவி லதா (27). இவா், கடந்த 3.9.2018 அன்று தனது கரும்புத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த பெரியமாம்பட்டு, காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் ராமச்சந்திரன் (எ) சிறுவங்கூரான் லலிதாவின் கழுத்தை அறுத்தைக் கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த 5 1/4 பவுன் நகைகளைத் திருடிச் சென்றாராம். இதுதொடா்பாக, தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராமச்சந்திரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஹொ்மிஸ் குற்றஞ்சாட்டப்பட்ட ராமச்சந்திரனுக்கு திருட்டுக் குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை குற்றத்துக்காக ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீா்ப்பளித்தாா். இந்தத் தண்டனையை ராமச்சந்திரன் ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி எஸ்.ஹொ்மிஸ் உத்தரவிட்டாா். அரசு வழக்குரைஞா் ஏ.சங்கீதா ஆஜரானாா்.

இதையடுத்து, ராமச்சந்திரனை போலீஸாா் கடலூா் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT