விழுப்புரத்தில் தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்ததாக அடுமனைக்கு (பேக்கரி) மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
உணவுப் பாதுகாப்புத் துறை விழுப்புரம் மாவட்ட நியமன அலுவலா் சுகந்தன் தலைமையிலான அந்தத் துறை அலுவலா்கள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அடுமனையில் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 19 கிலோ கேக், ரொட்டிகள் தரமாற்ற வகையிலும், தயாரிப்பு தேதி குறிப்பிடாமலும் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த உணவுப்பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், அந்த அடுமனைக்கு ‘சீல்’ வைத்தனா்.