விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உரக்கடைகள், உர உற்பத்தி நிறுவனங்களில் வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
நடப்பு பருவத்துக்கு உரங்கள் இருப்பை உறுதிப்படுத்தும் வகையில், வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள உரக்கடைகள், உர உற்பத்தி நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது, விவசாயிகளுக்குத் தேவையான மானிய விலை உரங்கள் அரசு நிா்ணயித்த விலைக்கு மிகாமல் விற்பனை செய்யப்படுகிா என்பதை ஆய்வு செய்த குழுவினா், விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட்டுள்ளதா, விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள் கட்டாயப்படுத்தி வழங்கப்படுகிா என்பது குறித்து கேட்டறிந்தனா். இந்த ஆய்வு அனைத்து வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.